இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் பயணத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட COVID சோதனையில், 40 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பயணிகளும், அவர்களுடன் கூடப் பயணிக்க இருந்தவர்களும் பயணிக்க முடியாது எனத் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த விமானத்தில் மொத்தம் 150 பயணிகள் பயணிக்க முடியும் என்பதால், சனிக்கிழமையன்று புது தில்லியில் இருந்து டார்வின் நகருக்குப் புறப்படவுள்ள இந்த விமானத்தில் வேறு பயணிகளைக் கண்டுபிடிப்பதற்காக முயற்சியில் அரசு இப்போது ஈடுபட்டுள்ளது.
சுமார் 9,000 பேர் - ஆஸ்திரேலியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து வீடு திரும்ப முற்படுகின்றனர், அதில் சுமார் 900 பேர் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
இந்தியாவிலிருந்து பயணிக்க முடியாது என்ற அரசின் பயணத் தடை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முடிவடைகிறது என்றாலும், விமான நிறுவனங்களின் விமான சேவை மீதான தற்காலிகத் தடை தொடர்கிறது.
சனிக்கிழமை காலை முதல், விமானங்கள் டார்வின் நகருக்குத் திரும்பும். பயணிகள் Howard Springs என்ற இடத்திலுள்ள தனிமைப்படுத்தப்படும் விடுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.