அறிமுகமாகும் கொரோனாவுக்கான Moderna தடுப்பூசி பிற தடுப்பூசிகளைவிட வித்தியாசமானதா?

இப்போது Pfizer மற்றும் AstraZeneca ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் Covid 19 இற்கான தடுப்பு மருந்துகள் இங்கே பயன்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக Moderna நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்த Moderna தடுப்பு மருந்து ஏற்கனவே இங்குள்ள தடுப்பு மருந்துகளை ஒத்ததா அல்லது வித்தியாசமானதா என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

Moderna vaccine

Health Minister Greg Hunt expects Moderna coronavirus jab will be available to young Australians soon. Source: AAP

உலக சுகாதார நிறுவனம் (WHO)  Covid 19 தொற்றுநோயைத்தடுப்பதற்கு இதுவரை 5 தடுப்பு மருந்துகளை அங்கீகரித்திருக்கிறது. Pfizer இன் தடுப்புமருந்து, AstraZeneca வின் தடுப்பு மருந்து, Johnson &Johnson இன் தடுப்புமருந்து, Moderna நிறுவனத்தின் தடுப்பு மருந்து, மற்றும் சீன நிறுவனமான Sinopharm இன் தடுப்புமருந்து என்பன அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

மாபெரும் அமெரிக்க நிறுவனமான Moderna நிறுவனம் தயாரிக்கும்  தடுப்பு மருந்து அமெரிக்காவில் 140 மில்லியன் dose கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.   25 மில்லியன்  dose களை வாங்க எமது அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவற்றுள் 10 மில்லியன் dose களை இந்த வருடத்திலும் மிகுதி 15 மில்லியன் doseகளை அடுத்தவருடம் வழங்கவும் Moderna ஒப்புக்கொண்டிருக்கிறது. இங்கு ஆஸ்திரேலியாவில் இந்த Moderna தடுப்பு மருந்தைத் தயாரிக்க எந்த நிறுவனமாவது முன்வந்தால், அதற்கு அனுமதி வழங்கவும் Moderna தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

mRNA 1273 என்று அழைக்கப்படும் Modernaவின் தடுப்புமருந்து Pfizer நிறுவனத்தின் தடுப்புமருந்துக்கு இணையான அதே தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தடுப்புமருந்தாகும். mRNA என்ற genetic materials - மரபியல் வஸ்துக்களை உடலில் செலுத்தி, உடலில் covid 19 இற்கு எதிரான எதிர்ப்புச்சக்தியை இது ஏற்படுத்துகிறது. இதுவும் இரண்டு dose கள் , 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படவேண்டும். Pfizer தடுப்புமருந்து -80 C இல் பத்திரப்படுத்தப்படவேண்டும்.  ஆனால் Moderna தடுப்பு மருந்தை -20 C இல் வைத்திருக்கலாம் அதாவது வீட்டிலுள்ள fridge இல்  freezer பகுதியில் வைத்துக்கொள்ளலாம்  என்பதும் சாதாரண fridge களில் 30 நாள் வரை வைத்திருக்கமுடியும் என்பதும் மேலதிக சௌகர்யமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்தின் மோசமான பக்க விளவுகள்  மற்றும் இவற்றின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு பற்றி இதுவரை மதிப்பீடுகள் தரவுகள் வெளிவந்துள்ளன.

Moderna வின் தடுப்புமருந்து உச்ச பட்ச ஆற்றல் efficacy ஐக் கொண்டது என்பது clinical trials மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. Covid 19 தொற்றிற்கு எதிராக 94.1 சதவீதம் தொடக்கம் 100 சதவீத ஆற்றல் கொண்டது என்பது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 99 இடங்களில் 30000 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட clinical trials மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த தடுப்பு மருந்து safe and effective பாதுகாப்பானது மற்றும் ஆற்றல் உள்ளது என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

18 வயது தொடக்கம் 64 வயதினருக்கிடையே நடத்தப்பட்ட clinical trials களின் போது, பொதுவாக இலேசான தலைவலி மற்றும் muscle soreness என்ற தசைநார்களில் ஏற்படும் வலி, இலேசான காய்ச்சல், ஊசி ஏற்றப்பட்ட இடத்தில் வலி என்பன போன்ற minor side effects சாதாரண பக்க விளைவுகள் மாத்திரமே பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மிகச்சிலருக்கு மட்டும் அன்றாட பணிகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தமருந்து இப்போது ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு  அங்கீகாரம் தரப்படவில்லை. TGA என்ற நிறுவனம் அங்கீகரித்தால் மாத்திரமே Moderna தடுப்புமருந்தை இங்கு நாம் பயன்படுத்தமுடியும். இதற்கான விண்ணப்பத்தை Moderna விரைவில் TGA யிடம் சமர்ப்பிக்கவிருக்கிறது. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்க ஏறக்குறைய 3 மாதங்கள் எடுக்கும். இந்த அங்கீகாரம் வழங்கப் பட்ட பின்னரும் ஒவ்வொரு முறையும் இந்த தடுப்பு மருந்து இறக்குமதியாகும் போதும் batch testing என்ற அடிப்படையில் ஒவ்வொரு batch உம் ஆற்றல், பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்யு முகமாக சுயாதீனமான, கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

50 வயதுக்கு குறைவானோருக்கு Pfizer தடுப்பு மருந்தே நல்லது என்று இப்போது சிபாரிசு செய்யப்பட்டுள்ள நிலையில் போதுமான அளவில் Pfizer தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. Pfizer தடுப்பமருந்தைப் பொறுத்த அளவில் 40 மில்லியன் dose களை வாங்க  அரசு ஒப்பந்தம் செய்திருந்தாலும் இவை உடனடியாக இங்கு வரும் சாத்தியமில்லை. இதனால் Pfizer தடுப்புமருந்துக்கு இணையான Moderna வை வாங்குவதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அரசு வாங்க உத்தேசித்திருக்கும் 25 மில்லியன் Moderna தடுப்பு மருந்தில் இந்த வருடம் பெறப்படவிருக்கும் 10 மில்லியன் டோஸ்கள் இந்தவருடம் பயன்படுத்தப்படும் என்றும் அடுத்தவருடம் பெறப்படும் 15 மில்லியன் doseகள் booster  doseகள் என்ற வகையில் Brazil மற்றும் South Africa போன்ற நாடுகளில் இருக்கும் virulent variant என்ற கடுமையான மற்றும் உருமாறிய covid 19 வைரஸ்களுக்கு எதிரான booster டோஸ்களாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அரசு எல்லாமாக 170 மில்லியன் dose களுக்கான மருந்துகளைப் பெற பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. 26 மில்லியன் மக்களுக்கு இவ்வளவு தடுப்பு மருந்து தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இது மிக அதிகம் என்றபோதும் இவை வந்துசேரும் கால அவகாசத்தின் அடிப்படையில் அவை வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு முதல் டோஸ் மற்றும் இரண்டாவது booster டோஸ் என்று இரண்டுதடவை தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ள நிலையில் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளைக் கலந்து கொடுக்கமுடியுமா என்பதற்கு இன்னும் திட்டவட்டமாக முடிவாகவில்லை. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு விடையளிக்கும் போது TGA இன் தலைவர் John Skerritt , இது தொடர்பான ஆய்வுகள் லண்டன் Oxford பல்கலைக்கழகத்திலும் ஐரோப்பவிலும் நடத்தப்பட்டுவருவதாகவும் , Pfizer, Johnson and Johnson, Moderna மற்றும் AstraZeneca ஆகிய நிறுவனங்கள, இந்த ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.

Moderna வைத்தவிர வேறு தடுப்பு மருந்துகளையும் அரசு இறக்குமதி செய்யும் சாத்தியமுண்டு என்று கருதலாம். அமெரிக்காவில் பிரபல Bio tech நிறுவனமான Novavax நிறுவனத்திடமிருந்து 51 மில்லியன் dose களை வாங்க அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால் இந்த மருந்துக்கான phase 3 clinical trials ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்பதோடு, அங்கீகாரத்தைப் பெறுவதிலும் தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதைத்தவிர, Covax என்ற அமைப்பிடம் இருந்து 25 மில்லியன் டோஸ்களை ஆ ஸ்திரேலியா பெறமுடியும். இந்த Covax என்பது தடுப்பு மருந்துகளைப் பாரபட்சமின்றி சம மான அடிப்படையில் எல்லா நாடுகளுக்கும் வழங்கும் நோக்கத்துடன் Vaccine Aliance மற்றும் WHO நிறுவனம் இணைந்து நிறுவியுள்ள அமைப்பாகும். இதன் அடிப்படையில் 9 வேறுபட்ட தடுப்புமருந்துகள் உலகெங்கும் விநியோகிக்கப்படவிருக்கின்றன. Astarazeneca, Novavax, Moderna, Curevac, Sanofi, Clover, போன்ற 9 நிறுவனங்களின் தடுப்புமருந்துகள் இதில் அடங்கும்.  விநியோகத்திற்கான தயார் நிலையைப் பொறுத்தே இவை இங்கு வந்துசேரக்கூடும்.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 16 May 2021 1:42pm
Source: ABC Australia

Share this with family and friends