COVID-19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக விக்டோரிய மாநில Premier Daniel Andrewsற்கு இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநில நாடாளுமன்றத்தின் வாகன தரிப்பிடம் வழியாக முக கவசம் இல்லாமல் நேற்று நடந்து செல்வது காணொலியில் பதியப்பட்டது.
அத்துடன் புதன்கிழமை அவர் ஊடகவியலாளர்களை சந்திக்க வரும் போது முக கவசம் அணியவில்லை.
இரண்டு நாட்களும், நாடாளுமன்றத்தினுள் அழைத்துச் செல்லப்பட்ட போது Daniel Andrews முக கவசம் அணிந்திருந்தார், ஆனால் அவர் வாகன தரிப்பிடம் வழியாக செல்வதற்கு முன்பு அதை கழற்றி விட்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து Premierக்கு இரண்டு 200 டொலர் அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக விக்டோரியா காவல்துறை இன்று உறுதிப்படுத்தியது.
தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட மெல்பன் வாசிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது, உட்புறமோ அல்லது வெளி இடங்களிலோ முகக் கவசம் அணிய வேண்டும் என்பது சட்டமாகும்.
இதற்காக மன்னிப்புக் கோரியுள்ள Premier Daniel Andrews, காவல்துறை அபராத கட்டளையை அனுப்பினால், அபராதத் தொகையைத் தான் செலுத்துவதாகக் கூறினார்.