*இப்பட்டியல் துல்லியமாகவும் புதுப்பித்தநிலையில் இருப்பதையும் உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், இங்கே பட்டியலிடப்பட்டுள்ள விதிகளிலும் அதிகாரப்பூர்வ தளங்களிலும் சில வேறுபாடுகள் இருக்கலாம். கோவிட்-19 தொற்றுநோயின் வேகமாக மாறிவரும் தன்மை மற்றும் அந்தந்த மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் புதிய அறிவிப்புகளே இதற்குக் காரணமாகும். புதிய விதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பட்டியலைப் புதுப்பிக்க முயற்சிக்கிறோம், ஆனால் சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படலாம். எனவே, முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பின் அதிகாரப்பூர்வ தளங்களைப் பார்க்கவும்.
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.