விக்டோரியாவில் வசிக்கும் நோரிகோ கிளார்க், வசந்த காலத்தில் அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் அரிப்பு போன்றவற்றுக்கு உள்ளாகிறார்.
இந்த அறிகுறிகளை அவர் ஒவ்வொரு முறையும் அனுபவிக்கும் போது, அவை கோவிட்-19 போன்று இருப்பதால், RAT பரிசோதனையை அவர் மேற்கொள்கிறார். பலரது நிலை இதுதான்.
கோவிட் மற்றும் hay fever-க்கு இடையிலான பொதுவான அறிகுறிகளில் இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை நோ, சோர்வாக அல்லது பலவீனமாக உணர்தல், தலைவலி மற்றும் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை அடங்கும் என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றா அல்லது hay feverஆ?
Hay fever மற்றும் கோவிட் அறிகுறிகளுக்கு இடையில் "பொதுவாக நிறைய ஒற்றுமை உள்ளது என்பதால், இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவது முக்கியம் என சிட்னியை தளமாகக் கொண்ட GP Dr Jason Yu கூறுகிறார்.
"பெயர் என்ன சொன்னாலும், hay fever காய்ச்சலை ஏற்படுத்தாது மற்றும் பொதுவாக தசை மற்றும் உடல் வலிகளுடன் தொடர்புடையது அல்ல" என்று Dr Jason Yu விளக்குகிறார்.
" Hay fever-இன் போது, தொண்டையில் உள்ள அசௌகரியம் பொதுவாக வலியை விட எரிச்சலை ஏற்படுத்துவதாக இருக்கும்."
Hay fever-இன் பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- தடைபட்ட தூக்கம்
- பகலில் சோர்வாக உணர்தல்
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- அடிக்கடி தலைவலி
- மீண்டும் மீண்டும் தொண்டை வலி
- ஒரு கரகரப்பான குரல்
- முக வலி அல்லது அழுத்தம்
- குறைந்த வாசனை உணர்வு
- பெரியவர்களில் அடிக்கடி சைனஸ் தொற்று
- குழந்தைகளில் மீண்டும் மீண்டும் காது தொற்று

Dr Jason Yu suffers from moderate hay fever himself, and knows the struggles of the condition all to well Credit: Jason Yu
" Hay fever கொஞ்ச நாட்களுக்கு நீடிக்கும் என்றபோதிலும் அவை வந்து வந்து செல்லும் என்று Dr Yu கூறுகிறார்.
"உங்களுக்கு நல்ல மற்றும் கெட்ட நாட்கள் உள்ளன. நீங்கள் ஒரு நாள் அறிகுறிகளைக் கவனிக்கலாம். ஆனால் அடுத்த நாள் மறைந்துவிடும். அல்லது அது பிற்பகலில் மறைந்துவிடும் அல்லது மோசமாகிவிடும் - அது Hay fever-ஆக இருக்கலாம். ஆனால் உங்கள் அறிகுறிகள் படிப்படியாக மோசமாகிவிட்டால், நீங்கள் கோவிட் பரிசோதனை செய்து பார்க்கலாம்" என்று Dr Yu விளக்குகிறார்.

The difference between COVID-19, flu, cold and allergy symptoms. Credit: Department of Health
Hay fever மற்றும் antihistamines
Hay fever மற்றும் hives, conjunctivitis,eczema போன்ற பிற ஒவ்வாமைகள் பொதுவாக antihistamineகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகின்றன.
ஆனால், hay fever-ஆல் ஏற்படும் நாசி அடைப்பு உட்பட அனைத்து ஒவ்வாமைகளுக்கும் antihistamines வேலை செய்யாது என்று Dr Yu கூறுகிறார்.
" Hay fever-ஆல் கடுமையான நாசி அடைப்பு உள்ளவர்கள் தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும், மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை இந்த நிலை காரணமாக வாயால் சுவாசித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்று Dr Yu கூறுகிறார்.
La Niña காரணமாக அதிக மகரந்தம் காணப்படும்
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது La Niña நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை அதிக மழைப்பொழிவைக் கொண்டுவரும் மற்றும் அதிக மகரந்த உற்பத்திக்கு வழிவகுக்கும்.
மேலும் thunderstorm ஆஸ்துமாவைக் குறித்தும் கவனமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இது காற்றில் அதிக மகரந்த அளவுகள் மற்றும் இடியுடன் கூடிய மழையின் கலவையால் ஏற்படுகிறது.
மகரந்தம் அதிகமாக காணப்படும் பருவத்தில் முகக்கவசம் அணிவது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் Dr Yu.
"கோவிட் மற்றும் hay fever-க்கு எதிராக முகக்கவசம் உங்களுக்கு இரட்டை பாதுகாப்பை அளிக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
மிதமான முதல் கடுமையான hay fever அறிகுறிகள் உள்ளவர்கள் ஒவ்வாமை பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுமாறும் ஒவ்வாமைகளைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது