விக்டோரியாவில் 23 பேர், தெற்கு ஆஸ்திரேலியாவில் 5 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 10 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 44 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்றையதினம் 10,504 தொற்றுக்கள் பதிவாகியிருந்தநிலையில் இன்று 13,755 ஆக அதிகரித்துள்ளது.
NSW மருத்துவமனைகளில் 1,822 பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். இது கடந்த மூன்று மாதங்களில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்
தெற்கு ஆஸ்திரேலியாவிலும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
விக்டோரிய மாநிலம் Pandemic Declaration-தொற்றுநோய் பிரகடனத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு மாநில சுகாதார அமைச்சருக்கு தொற்று தொடர்பிலான கட்டுப்பாடுகளை வழங்க அனுமதியளிக்கிறது.
மெல்பனின் ஃபாக்னர் பகுதியில் உள்ள செயின்ட் பசிலின் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மற்றொரு கோவிட் பரவல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 2 அன்று அறிவிக்கப்பட்ட இப்பரவலில் மேலும் 14 குடியிருப்பாளர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
"Centaurus" என்ற பெயர் கொண்ட புதிய துணைத் திரிபான BA.2.75 இந்தியாவிலும் மற்ற பத்து நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது BA.2 இன் sub-lineage எனக் கூறப்படுகிறது. இது Omicron இன் stealth திரிபு என்றும் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு BA.2.75 ஐ கரிசனைக்குரிய திரிபு என குறிப்பிடவில்லை. ஆனால் அதைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 13,755 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,056 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1700 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,878 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,296 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,072 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 1477 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT-இல் புதிதாக 342 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.