விக்டோரியாவில் 16 பேர், குயின்ஸ்லாந்தில் 15 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 20 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 58 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும், கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவிட் பரவல் ஏற்பட்டுள்ள Coral Princess பயணிகள் கப்பல், தற்போது பிரிஸ்பேனில் இருந்து NSW இன் தெற்கு கரையில் உள்ள Eden துறைமுகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இக்கப்பல் புதன்கிழமை சிட்னிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Coral Princess-இல் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுக்கே கோவிட் தொற்று இருப்பதாக NSW Health தெரிவித்துள்ளது. கப்பலில் ஏறும் முன் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
கோவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய கால எல்லையை, 12 வாரங்களில் இருந்து 28 நாட்களாகக் குறைப்பதற்கான ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழுவின் ஆலோசனையை, NSW மற்றும் விக்டோரியா மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT ஆகியவை திங்களன்று இந்த ஆலோசனையை முதலில் ஏற்றுக்கொண்டிருந்தன.
ஒருவருக்கு முதலில் கோவிட் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு, கோவிட் சோதனையில் மீண்டும் நேர்மறை முடிவைப் பெற்றால், அவர் புதிய தொற்றாளராகவே கணக்கிடப்படுவார்.
கடந்த இரண்டு வாரங்களில் கோவிட் தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா தெரிவித்துள்ளது.
வணிகங்களுக்கான Small Business Ventilation Grant திட்டத்தின் மற்றொரு சுற்றை, விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது.
விக்டோரிய மாநிலத்தில் தற்போதுள்ள முகக்கவச விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று மாநில சுகாதார அமைச்சர் Mary-Anne Thomas கூறினார். எவ்வாறாயினும், முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பில் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் உள்ளரங்குகளில் மக்கள் முகக்கவசங்களை அணியலாம் எனவும் அவர் ஊக்குவித்தார்.
தினசரி தொற்று எண்ணிக்கை ஜூலை பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தினசரி 3000 புதிய தொற்றுக்கள் பதிவாகலாம் என்றும் ACT தலைமை சுகாதார அதிகாரி Kerryn Coleman கூறினார்.
இருப்பினும் முகக்கவச கட்டுப்பாட்டை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிகரித்து வரும் கோவிட் மற்றும் Flu தொற்றுக்ககளுக்கு மத்தியில், சில மாநிலங்கள் elective surgeries-ஐ ஒத்திவைக்கலாம் என ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Paul Kelly, ABC TV-இடம் கூறினார்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 10,806 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,627 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,000 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,668 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1812 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
ACT- இல் புதிதாக 1174 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.