கனடா நாட்டில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் Liberal கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளதை அடுத்து, Liberal கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 6 ஆண்டுகளில் சந்திக்கும் 3-வது பொதுத் தேர்தலாகும். வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் Liberal கட்சி முன்னிலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தேர்தலில் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தைத் தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கொரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப் போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு நடுவே, கடந்த மாதம், தேர்தலை அறிவித்தார் கனேடிய பிரதமரும் Liberal கட்சித் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ. கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகச் சமாளித்தமை, காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் கொள்கைகள், அனைவருக்கும் வீட்டு வசதி, துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒடுக்கியமை போன்ற பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட தனது அரசின் மீது மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருப்பதால், தேர்தலை முன்கூட்டியே சந்திக்க பிரதமர் ட்ரூடோ தயாரானார்.
நினைத்த வெற்றியை Liberal கட்சி பெறாவிட்டாலும், முறையைப் போன்று சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ மீண்டும் பிரதமராவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Liberal leader Justin Trudeau casts his ballot in the 44th general federal election as he's joined by his children, in Montreal on Monday, Sept. 20, 2021. Source: The Canadian Press

Conservative leader Erin O'Toole speaks during the federal election French-language leaders debate, Wednesday, Sept. 8, 2021 in Gatineau, Quebec. Source: The Canadian Press
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.