Key Points
- ஒருவருக்குக் COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டால், அதனால் வரும் நோய் எதிர்ப்பு சக்தி நான்கு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று பேராசிரியர் Michael Kidd கூறினார்.
- COVID-19 தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை, வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகள் கணிசமாகக் குறைக்கின்றன
- ஒவ்வொரு முறையும் தொற்று ஏற்படும்போது, COVID-19 தொற்றினால் வரும் நீண்ட கால தாக்கங்கள் (Long Covid) ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என ஆரம்பகால ஆராய்ச்சி தெரிவிக்கிறது
தற்போதைய Omicron அலையில் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக COVID-19 தொற்று ஏற்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் Linzi Ibrahim என்பவரும் ஒருவர்.
இரண்டு குழந்தைகளின் தாயும் ஆஸ்துமா நோயாளியுமான Linzi Ibrahim, இரண்டாவது தடவை ஏற்பட்ட தொற்று மிகவும் மோசமாகத் தன்னைப் பாதித்தது என்கிறார்.
“இந்த இரண்டாவது தடவை ஏற்பட்ட தொற்றினால், நான் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டேன். இது எனக்கு மனக் கவலை அளிக்கிறது,” என்று " SBS இடம் Linzi Ibrahim கூறினார்.
இந்தத் தடவை, COVID-19 வைரஸ் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதித்ததாக அவர் கூறினார்.
அடிப்படை வீட்டு வேலைகளான சமையல் செய்தல், மற்றும் சுத்தப் படுத்துதல் போன்ற விடயங்களைச் செய்வதற்குக் கூட உடல் ஒத்துழைக்க வில்லை என்றும், எந்த வேலையைச் செய்யவோ, தனது குழந்தைகளுடன் விளையாடவோ, உடற்பயிற்சி செய்யவோ தனக்கு ஆற்றல் இருக்கவில்லைLinzi Ibrahim
என்றும் கூறிய அவர், என்ன விலை கொடுத்தாலும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்குமாறு அனைவருக்கும் அவர் அறிவுறுத்துகிறார்.
தொற்று மீண்டும் ஏன் ஏற்படுகிறது?
Omicron இன் புதிய துணை வகைகளான BA.5 மற்றும் BA.4 ஆகியவை முந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகளில் இருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கின்றன என்று சுகாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முந்தைய Delta மாறுபாடு அல்லது Omicron துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னுமொரு புதிய துணை மாறுபாட்டினால் மீண்டும் பாதிக்கப்படலாம்.
கடந்தகால நோய்த் தொற்றின் நோய் எதிர்ப்பு சக்தி நான்கு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி, பேராசிரியர் Michael Kidd கூறுகிறார்.
நாட்டின் சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழுவின் (Australian Health Protection Principal Committee) ஆலோசனையின் பேரில், நோய்த்தொற்று மீண்டும் ஏற்படக்கூடிய காலத்தை 12 வாரங்களில் இருந்து 28 நாட்களாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறைத்துள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் கடைசி நாளிலிருந்து 28 நாட்களுக்குப் பின்னர் சோதனை செய்து தொற்று இருப்பதை உறுதி செய்தவர்களை, புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்கள் கணக்கில் தற்போது சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.
முந்தைய நோய்த் தொற்றைக் காட்டிலும் COVID மறு தொற்று மிகவும் கடுமையானதா?
புதிய COVID துணை வகைகள் “அதிகமாகப் பரவக் கூடியவை” என்று பேராசிரியர் Michael Kidd கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் தாக்கத்தைப் பற்றி இன்றும் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
“Omicronனின் முந்தைய மாறுபாடுகள் அல்லது முந்தைய Alpha அல்லது Deltaவை விட, இந்தப் புதிய மாறுபாடுகள் கடுமையான நோயை ஏற்படுத்துகின்றனவா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் கூறுகிறார்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அல்லது நாள்பட்ட உடல்நலம், இயலாமை அல்லது நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.பேராசிரியர் Michael Kidd
வயது, வைரஸின் வீரியம், தடுப்பூசி நிலை, நோயெதிர்ப்பு குறைபாடு நிலை மற்றும் இரண்டு நோய்த் தொற்றுகளுக்கு இடையிலான காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து மறு தொற்றின் தீவிரம் வேறுபடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் தொற்று ஏற்படும்போது, COVID-19 தொற்றினால் வரும் நீண்ட கால தாக்கங்கள் (Long Covid) ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என இன்னமும் ஒன்று காட்டுகிறது.
“நுரையீரல் மற்றும் பல உடல் அமைப்புகளில் (இதயக் கோளாறுகள், இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கோளாறுகள், நீரிழிவு, சோர்வு, இரைப்பை குடல் கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், மனநல கோளாறுகள், தசைக்கூட்டு கோளாறுகள் மற்றும் நரம்பியல் கோளாறுகள்) என்று பல காரணங்களால் ஏற்படும் இறப்பு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தேவை, மற்றும் பாதகமான உடல் நல விளைவுகளின் கூடுதல் ஆபத்துகள் மறு தொற்று ஏற்படுபவர்களிடையே நாங்கள் காண்கிறோம்.”
மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம்?
வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் முகக் கவசங்களை அணியுமாறும் சமூக இடைவெளியைப் பேணுமாறும் பேராசிரியர் Michael Kidd மக்களிடம் கடுமையாக வலியுறுத்துகிறார்.
“கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்குச் செல்வது, லிஃப்டில் பயணிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்” என்கிறார் பேராசிரியர் Michael Kidd.
“அதே வேளை, பூஸ்டர் டோஸ்கள் உட்பட, தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருங்கள்.”
முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு முறை நோய்த்தொற்று ஏற்பட்டால் மறு தொற்று ஏற்படுவதற்கும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அபாயங்கள் குறைவாக இருப்பதாகவும் குயின்ஸ்லாந்து அரசு கூறுகிறது. பூஸ்டர்கள் உட்பட தடுப்பூசியின் ஒவ்வொரு கூடுதல் டோஸும் ஆபத்தை மேலும் குறைக்கிறது.
சமூக இடைவெளி பேணுதல், கை சுகாதாரம் மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் கிருமிகள் பரவா வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் ஆகியவை பெருந்தொற்றின் காலத்தைப் போலவே இப்போதும் மிக முக்கியம் என்று பேராசிரியர் Michael Kidd கூறினார்.

Health authorities advise residents to do a RAT or PCR test as soon as COVID-19 symptoms occur. Source: Getty / Getty Images/Tang Ming Tung
உங்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது
RAT சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தாலும், நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் PCR பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
தனக்கு மிக மோசமான அறிகுறிகள் இருக்கிறதென்று ஒரு மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்பு அவர் செய்த நான்கு RAT சோதனைகள் எதிர்மறையான முடிவுகளைக் கொடுத்தது என்றாலும் PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று Linzi Ibrahim கூறினார்.
வைரஸ் தடுப்பு மாத்திரைகள் பெற உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று இப்பொழுதே அறிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
தொற்றின் தீவிரம், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தேவை மற்றும் இறப்பை சந்திக்கும் அபாயங்களை, இந்த வாய் வழி COVID-19 வைரஸ் தடுப்பு மாத்திரைகள் கணிசமாகக் குறைக்கிறது என்று பேராசிரியர் Michael Kidd கூறுகிறார்.
COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளது என்று சோதனையில் தெரிய வந்த ஐந்து நாட்களுக்குள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவை சிறப்பாக செயல்படும்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.