Key Points
- கூட்டு RATகளால் COVID-19, influenza A மற்றும் influenza B ஆகியவற்றை அடையாளம் காண முடியும்.
- ஆஸ்திரேலியாவில் ஏழு வெவ்வேறு சோதனை உபகரணங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
- ஆஸ்திரேலியாவில் ஏழு வெவ்வேறு சோதனை உபகரணங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
Influenza A, Influenza B மற்றும் கோவிட்-19 ஆகியவற்றைப் பரிசோதிக்கும் Combination rapid antigen tests (RATs) சமீபத்தில் மருந்தகங்களில் விற்கத் தொடங்கியுள்ளன.
Combination rapid antigen tests, சாதாரண கோவிட் சோதனை உபகரணத்தைப் போலவே செயற்படுகின்றன.
Influenza A , Influenza B மற்றும் கோவிட்-19 ஆகியவற்றுக்கான முடிவை, குறித்த உபகரணத்திலுள்ள தனித்தனி கோடுகள் காண்பிக்கும்.
Combination RATs எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
Influenza மற்றும் கோவிட்-19 ஆகியவை ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவது அரிது என Deakin பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான பேராசிரியர் Catherine Bennett கூறுகிறார்.
ஒரே நேரத்தில் Influenza மற்றும் கோவிட்-19 ஐ பரிசோதிக்கும் திறன், ஆஸ்திரேலியாவின் flu season தொடங்கும் குளிர்காலத்திற்கு முன்னதாக பயனுள்ளதாக இருக்கும் என பேராசிரியர் Bennett கூறுகிறார்.
வைரஸ்களுக்கு நேர்மறையாக சோதனை செய்தவர்கள் பொதுவாக ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு கோவிட்-19 அல்லது Influenza இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவர்களின் நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவும் என்று அவர் கூறினார்.

Home test kits used to identify influenza varieties (pictured above) and combination COVID-19 and influenza RATs have been available in other countries for some time. Source: Getty / Future Publishing
ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 rapid antigen self-tests மற்றும் combination self-tests அனைத்தும் இல் பட்டியலிடப்பட்டுள்ளன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.