மெல்பனில் 5 கி.மீ தொலைவில் எங்கல்லாம் செல்லலாம்? இந்த வரைபடத்தைப் பாருங்கள்

முடக்க நிலை அறிவிக்கப்பட்ட மெல்பன் பெரு நகர் பகுதியில் வசிப்பவர்கள் அவர்களது உள்ளூராட்சிப் பகுதிகளில் மட்டும் அல்லது, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியும். உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தை கீழே உள்ள வரை படத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

SBS News graphic

Source: SBS News

மெல்பன் பெரு நகரில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மற்றும் உடற்பயிற்சி செய்ய என்ற காரணங்கள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டும், தங்கள் உள்ளூராட்சிப் பகுதிக்குள் அல்லது வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்குள் பயணிக்க முடியும்.  அவர்கள் வாழுமிடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் கடைகள் இல்லை என்றால் மட்டுமே அந்த சுற்றளவிற்கு வெளியே செல்ல முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஐந்து காரணங்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மக்கள் கேட்கப்படுகிறார்கள்.

இந்தக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 28ஆம் தேதி இரவு 11:59 வரை நடைமுறையில் இருக்கும்.

உங்கள் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் எல்லை எங்கே இருக்கிறது? கண்டுபிடிக்க கீழே உள்ள எங்கள் (interactive) வரைபடத்திற்குச் செல்லவும்.
மெல்பன் பெரு நகர் பகுதி பின்வரும் 31 உள்ளூராட்சிப் பகுதிகளை அடக்கும்: Banyule, Hume, Moreland, Bayside, Kingston, Mornington Peninsula, Boroondara, Knox, Nillumbik, Brimbank, Manningham, Port Phillip, Cardinia, Maribyrnong, Stonnington, Casey, Maroondah, Whitehorse, Darebin, Melbourne, Whittlesea, Frankston, Melton, Wyndham, Glen Eira, Monash, Yarra, Greater Dandenong, Moonee Valley, Yarra Ranges மற்றும்Hobsons Bay.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநில அரசுகளின் கோவிட் -19 குறித்த ஊடகவியலாளர் சந்திப்புகளின் நேரடி மொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் SBS வழங்குகிறது.  .  கோவிட்-19 குறித்த செய்திகளைத் தமிழ் மொழியில் அறிந்து கொள்ள  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும்.

Interactive by Ken Macleod, artwork by Jono Delbridge.

 


Share
Published 23 August 2021 3:10pm
Updated 12 August 2022 2:59pm
By SBS News, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends