இந்திய உணவகங்கள் மீது விசா மோசடி விசாரணைகள்

சன்ஷைன் கோஸ்ட்டில், விசா மோசடிகள் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டவை எனக்கூறப்படும் இந்திய உணவகங்கள் உட்பட சில உணவகங்கள் மீது ஆஸ்திரேலிய அரசு விசாரணைகளை நடத்திவருகிறது.

cc

Source: AAP

சன்ஷைன் கோஸ்ட்டில், விசா மோசடிகள் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டவை எனக்கூறப்படும் இந்திய உணவகங்கள் உட்பட சில உணவகங்கள் மீது ஆஸ்திரேலிய அரசு விசாரணைகளை நடத்திவருகிறது.

இப்படிப்பட்ட உணவகங்கள், வணிகங்களுக்காக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் வலைத்தளங்கள், பேஸ்புக் பக்கங்களை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவை செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட உணவகங்கள் மற்றைய சாதாரண உணவகங்கள் போல் தோற்றமளிப்பதாகவும், முறையான பதிவுகள், அமைப்புகள் என எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்திருப்பதாகவும், ஆனால் அவை வியாபாரத்துக்காகத் திறக்கப்படுவதில்லை.

A Sunshine Coast யிலுள்ள குறித்த இரண்டு உணவகங்கள் மீதும் விசா மோசடிக்குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருப்பதாகவும், குடிவரவுத்திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாகவும் A Sunshine Coast Council பேச்சாளர் Sunshine Coast Daily பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள திணைக்களம், மேலும் பல அரச நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து இவ்விசாரணைகளில் செயல்படுவதாக குடிவரவுத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"ஆஸ்திரேலியாவில் விசா மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நாங்கள் மற்ற அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், மேலும் சாத்தியமான மீறல்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொள்கிறோம்," என்று குடிவரவுத்திணைக்கள பேச்சாளர் கூறியதாக சன்ஷைன் கோஸ்ட் டெய்லி செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

 

 

 

Share

Published

Updated

By Praba Maheswaran


Share this with family and friends