‘இந்தியா, நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’: SBS கோவிட் பேரிடர்கால நிதி சேகரிப்பு

Relatives perform the last rites for a loved one who died from COVID-19 in New Delhi, India.

Relatives perform the last rites for a loved one who died from COVID-19 in New Delhi, India. Source: AAP

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம்கட்டப் பரவல் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் கோவிட் தொற்றுக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். எண்ணற்ற குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொள்கின்றன. மருத்துவத்துறையும் என்ன செய்வதென்று தெரியாதநிலையில் திண்டாடிக்கொண்டிருக்கின்றது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, நிரம்பிவழியும் தீவிர சிகிச்சை பிரிவுகள், முக்கியமான மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு என பல்வேறு இடர்களை கடந்த பல நாட்களாக இந்தியா சந்தித்துவருகிறது.  இந்த பொது சுகாதார நெருக்கடி நிலையில் உதவும் வகையில் SBS India COVID Appeal Radiothon என்ற நிதிசேகரிப்பை SBS நடத்துகிறது.நிதியுதவி செய்ய நீங்கள் விரும்பினால்    ஐப் பார்வையிடலாம்.

இந்தியாவில் மோசமாகி வரும் கொரோனா வைரஸ் பரவலால் ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக SBS இன் Director of Audio and Language Content- David Hua கூறுகிறார்.

"பல ஆஸ்திரேலியர்கள் இந்தியாவிலுள்ள தமது குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அங்குள்ள நிலைமையையொட்டி என்ன செய்ய முடியும் என்று தெரியாமல் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். SBS India COVID Appeal Radiothon மூலம்  இந்தியாவுடன் தொடர்புடைய ஆஸ்திரேலியர்கள் இப்பேரிடர் காலத்தில் தம்மாலியன்ற உதவியை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளதாக நம்புகிறேன் ” என திரு Hua கூறுகிறார்.
India COVID
A woman mourns as her relative died of COVID-19 at a hospital in Ahmedabad, India. Source: AAP Image/EPA/Divyakant Solanki

SBS India COVID Appeal Radiothon என்றால் என்ன?

இந்த சிறப்பு முயற்சியின் மூலம், இந்தியாவில் அவசர உதவி தேவைப்படும் மக்கள், குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உயிர் காக்கும் உதவியை வழங்குவதற்கான UNICEF-இன் முயற்சியில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாங்கள் நிதி சேகரிக்கிறோம்.
'இந்தியா, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று சொல்ல நீங்களும் எங்களுடன் இணையுங்கள்.

நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும்?

நீங்கள் வழங்கும் நிதியுதவி பின்வருவனவற்றுக்கு பயன்படுத்தப்படும்:

  • கடுமையான மற்றும் சிக்கலான COVID-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான Oxygen Generation Plants-ஐ  மருத்துவமனைகளுக்கு வழங்குதல்
  • மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விரைவான, துல்லியமான சோதனை இயந்திரங்களை வழங்குதல்.
  • UNICEF ஆதரவுடன் நடைபெறும் COVAX நடவடிக்கை மூலம் COVID-19 தடுப்பூசிகளின் தற்போதைய விநியோகத்தை ஆதரித்தல்.

நிதியுதவி வழங்குவது எப்படி?

நிதியுதவி செய்ய நீங்கள் விரும்பினால்    ஐப் பார்வையிடலாம் அல்லது 1300 884 233 ஐ அழைக்கலாம். $2 க்கு மேல் உள்ள அனைத்து நன்கொடைகளும் வரியில் கழித்துக்கொள்ளப்படக்கூடியவையே.

தயவுசெய்து தாராளமாக நன்கொடை அளித்து இந்தியாவில் உள்ள குடும்பங்களையும் சமூகங்களையும் பாதுகாக்கும் UNICEF- இன் பணிக்கு உதவுங்கள்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 17 May 2021 7:02pm
Updated 25 May 2021 8:31pm
By SBS Radio
Source: SBS


Share this with family and friends