ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட விமான போக்குவரத்து தொடர்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளினால் ஆஸ்திரேலியாவுக்கு பாரியளவிலான வருமானம் கிடைத்துவரும் பின்னணியில் இருநாடுகளுக்கிடையிலான அதிகளவிலான விமான சேவைகள் உருவாக்கப்படவுள்ளன.
தற்போது Air India விமானநிறுவனமும், codeshare airline Jet Airways-உடன் இணைந்து Qantas நிறுவனமும் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நேரடி விமான சேவைகளை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.