FIFA உலகக் கோப்பை போட்டிகளை SBS வானொலியில் எப்படிக் கேட்கலாம்?

கத்தாரில் நடைபெறும் The FIFA World Cup 2022™ உதைபந்தாட்டங்களின் ஒவ்வொரு போட்டியையும் ஆஸ்திரேலியா முழுவதும் SBS வானொலியில் நேரலையாகவும் இலவசமாகவும் கேட்டு மகிழுங்கள்.

QATAR SOCCER FIFA WORLD CUP 2022

Cameroon's goalkeeper Gael Ondoua (L) and Brazil's Neymar (R) on office buildings in Doha, Qatar. Source: EPA / NOUSHAD THEKKAYIL/EPA/AAP Image

FIFA உலகக் கோப்பை போட்டிகள் இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் அனைத்தும் நாடுமுழுவதிலும் SBS வானொலியூடாக இலவசமாக ஒலிபரப்பாகவுள்ளன. உலகக்கோப்பைக்கான அனைத்து 64 போட்டிகளையும் நேரலையாக மற்றும் இலவசமாகக் கேட்கலாம்:

எப்படிக் கேட்கலாம்?

ஒவ்வொரு போட்டியையும் 12 மொழிகளில் நேரலையில் கேட்பதற்கு, உங்கள் DAB Digital radio, SBS வானொலியின் இணையத்தளம் (, அல்லது இலவச SBS ரேடியோ மொபைல் செயலி (SBS Radio mobile app) மூலம் எங்களின் பிரத்யேக FIFA World Cup 2022™ ஒலிபரப்பு நிலையங்களான SBS Football 1, 2 மற்றும் 3யை Tune செய்து கொள்ளுங்கள்.
  • SBS Football 1 (இப்போது ஆரம்பமாகிவிட்டது): விளையாட்டுகளின் போதான ஒவ்வொரு போட்டியினதும் ஆங்கில மொழியிலான நேரடி வர்ணனையும், மற்ற எல்லா நேரங்களிலும் உலகக் கோப்பை தொடர்பிலான இசையும் ஒலிபரப்பாகும்.
  • SBS Football 2 and 3 (நவம்பர் 14ல் ஆரம்பமாகிறது): போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் அணிகளினது மொழிகளிலான நேரடி வர்ணனை.
  • SBS Arabic24: ஒவ்வொரு போட்டியினதும் அரபு மொழியிலான நேரடி வர்ணனை.

    FIFA உலகக் கோப்பையின் உலகளாவிய ஒலிபரப்புப் பங்காளிகளினால் வர்ணனை வழங்கப்படுகிறது. மேலும் விளையாட்டின் வர்ணனைகள் அரபு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு, குரோஷியன், போலிஷ், ஜப்பான், கொரியன், பாரசீகம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் SBS தளங்களில் கிடைக்கும்.
போட்டியின் போது SBS Radio 3யானது SBS Football 2 ஆக மாற்றமடைந்து, ஒவ்வொரு போட்டியினதும் ஆங்கிலம் அல்லாத பிற மொழி வர்ணனையையும் வழங்குகிறது. இதே நேரம் BBC World Service நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்பதற்கு, இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

உதைபந்தாட்டம் தொடர்பிலான கீதங்கள் - Football fever anthems

நேரடிப் போட்டிகளுக்கப்பால், கடந்த போட்டிகளின் அதிகாரப்பூர்வப் பாடல்கள் மற்றும் சில சிறந்த (மற்றும் மோசமான) தேசிய அணிகளின் பாடல்கள் உட்பட இடைவிடாத பிரபலமான உதைபந்தாட்ட கீதங்களைக் கேட்க எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் உலகக் கோப்பை அனுபவத்தை முன்கூட்டியே ஆரம்பிக்க, DAB radio அல்லது SBS ரேடியோ இணையதளத்தில் (SBS Football 1 ஐ கேளுங்கள்.

FIFA World Cup 2022ᵀᴹ போட்டிகள் நடைபெறும் திகதிகளும் நேரங்களும் - dates and time

SBS வானொலியின் ஆங்கிலமல்லாத பிற மொழி வர்ணனை தொடர்பிலான அட்டவணை, போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் புதுப்பிக்கப்படும்.
  • Group Stage: November 21 - December 3
  • Round of 16: December 4 - 7
  • Quarter-Finals: December 10 - 11
  • Semi-Finals: December 14 - 15
  • 3rd vs 4th playoff: December 18
  • World Cup Final: December 19
Language broadcast partners include: BBC, Radio Nacional de España, Radio France Internationale, BAND, beIN, RTP, ARD, SRF, RNE, Radio Oriental Montevideo, HRT, RFI, NHK, NOS, VRT, Polskie Radio, Seoul Broadcasting System.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.






Advertisement


 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 11 November 2022 11:47am
By Maheswaran Prabaharan
Source: SBS


Share this with family and friends