சிட்னி வாழ் தனி நபர்களும் தனிமைப்படுத்தல் விதிகளும்

சிட்னி பெரு நகரில் தனியாக வாழ்பவர்கள் விருந்தாளி ஒருவரை மட்டும் வீட்டிற்கு வர அனுமதிக்க முடியும். ஜூலை 31ஆம் தேதி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடு, தனியாக வாழும் ஒருவர் தன்னைப் பார்க்க வருவதற்காக ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும். அவர் குடும்ப அங்கத்தவராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஆனால், பரிந்துரைத்து அனுமதி பெற்ற பின்னர், அவரை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

dog woman lockdown

Source: Getty Images/Justin Paget

கொரோனா வைரஸ் முடக்க நிலையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்திருப்பதாக NSW மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தனியாக வாழ்பவர்களுக்கு ஒரு சலுகையை அறிவித்தது.

தனியாக வாழ்பவர்கள் வீட்டிற்கு வந்து செல்வதெற்கென ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும்.  பெயர் குறிப்பிடப் பட்டவர் மட்டும் அவர் வசிக்கும் இடத்திற்கு, எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சென்று வர முடியும்.

இந்த விதிமுறை மெல்பன் நகரில் நடைமுறையில் இருந்தது.  இருந்தாலும் NSW மாநில அரசு அதனை நீண்டகாலமாக எதிர்த்தது.  தினசரி உடற் பயிற்சிக்காக மட்டும் மக்கள் வெளி இடங்களில் சந்திப்பதை அனுமதித்தது.  ஆனால், இந்த மாத ஆரம்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டும் ஒருவர் வீட்டிற்கு வர அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளது.


 

இந்த விதிகளின் முக்கிய கூறுகள்:

  • பரிந்துரைக்கப் பட்டவர் மட்டும் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.  ஆனால் நீங்கள் அவர் வீட்டிற்கு செல்ல முடியாது.
  • பரிந்துரைக்கப் பட்டவர் அவரது வீட்டிலிருந்து 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யலாம்.  ஆனால் அவர் வாழும் உள்ளூராட்சிப் பகுதி என்றால் அங்கிருந்து வெளியேற முடியாது.
  • கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் ஒருவரையே அவர்கள் வீட்டிற்கு வர அனுமதி கோரி பரிந்துரைக்க வேண்டும்.

 

இந்த அனுமதி குறித்துப் பேசும் போது, “நீங்கள் ஒவ்வொரு நாளும், வெவ்வேறு நபர்களை வீட்டிற்கு அழைக்க முடியாது” என்று NSW Premier Gladys Berejiklian கூறினார்.

இந்த சலுகை என்று NSW மாநில தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கவலை தெரிவித்தார்.  ஆனால், அதனால் ஏற்படும் ஆபத்தை விட மக்களின் மனநலம் குறித்த கவலைகள் அதிகம் என்றார்.
இதற்குத் தகுதியானவர்கள் யார்?

நீங்கள்:

  • தனியாக வாழ்பவராக இருந்தால், அல்லது
  • 18 வயதுக்குக் குறைந்த வயதுடைய குழந்தைகளுடன் வாழும் தனி பெற்றார், என்றால்
உங்களுக்குப் பொருந்தும்.


 

நீங்கள் என்ன செய்ய முடியும்?

  • பரிந்துரைக்கப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களை சந்திக்கலாம்.
  • நீங்கள் அவர்களின் வீட்டிற்கு செல்ல முடியாது.
  • பரிந்துரைக்கப்பட்ட நபர் குழந்தைகளைப் பராமரிக்க வேறு பராமரிப்பு ஏற்பாடுகள் இல்லையென்றால், அவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வரலாம்.
  • பரிந்துரைக்கப்பட்ட நபருடன் உடற்பயிற்சி அல்லது வெளிப்புற பொழுது போக்கிற்காக நீங்கள் வெளியே செல்லலாம்.
  • ஒரே வாகனத்தில் பயணிக்க விதிக்கப்பட்டிருக்கும் (car-pooling prohibition) தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், அவ்வாறு பயணம் செய்யும் போது அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வேறொருவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டிருக்க முடியாது.
  • நீங்கள் ஒரு மாற்றுத் திறனாளி அல்லது உங்களுக்குப் பராமரிப்புத் தேவை என்றால், பரிந்துரைக்கப் பட்டவர் உங்கள் வீட்டிற்கு வரும் வேளை, உங்கள் பராமரிப்பாளர் அல்லது உதவிப் பணியாளர் உங்களுடன் இருக்க முடியும்.

 

நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?

  • உங்களால் பரிந்துரைக்கப்பட்டவரை சந்திக்க உங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யலாம், ஆனால் Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour உள்ளூராட்சிப் பகுதிகள் உட்பட சிட்னி பெரு நகரை விட்டு வெளியேற முடியாது.
  • பிராந்திய இடங்களில் வாழ்பவர்கள் சிட்னி பெரு நகருக்குப் பயணம் செய்ய முடியாது.
  • தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் உள்ளூராட்சிப் பகுதிகளான Parramatta, Georges River, Campbelltown, Canterbury-Bankstown, Liverpool, Fairfield, Cumberland, Blacktown மற்றும் Penrith பகுதிகளில் வசிக்காதவர்கள், அந்தப் பகுதிகளில் வசிக்காத ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் உள்ளூராட்சிப் பகுதிகள்

  • அதே உள்ளூராட்சிப் பகுதியில் வாழும் ஒருவர் மற்றும்
  • அவர்களின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வாழும் ஒருவர்
தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் உள்ளூராட்சிப் பகுதிகளான Parramatta, Georges River, Campbelltown, Canterbury-Bankstown, Liverpool, Fairfield, Cumberland, Blacktown மற்றும் Penrith நகரின் சில பகுதிகள்.
old man getty
In the inner city 37 per cent of households are people who live alone and in Greater Sydney it’s 21 per cent, according to the deputy lord mayor of Sydney. Source: Getty Images/Westend61
எப்படி தேர்வு செய்வது

தேர்ந்தெடுக்கும் நபர்:

      • உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபர்
      • அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறீர்கள்
      • அவருடன் இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்கள்
என்பதை உறுதிப் படுத்திய பின்னரே அவரைப் பரிந்துரைக்கவும்.


ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு  என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 14 August 2021 3:29pm
Updated 12 August 2022 3:06pm
By Chiara Pazzano, Kulasegaram Sanchayan


Share this with family and friends