இந்நாட்டில் குடிவந்த நாம் நல்லிணக்கத்திற்காக என்ன செய்யலாம்

இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீக குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம்.

An artist at an art installation in Aboriginal colours.

The theme of National Reconciliation Week 2021 is More than a word. Reconciliation takes action. Source: WILLIAM WEST/AFP via Getty Images

தேசிய நல்லிணக்க வாரம் என்றால் என்ன?

1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் கருத்துக்கணிப்பு, நில உரிமை குறித்த Mabo வழக்கின் தீர்ப்பு என்பவற்றை நினைவு கூரும் வகையில் தேசிய நல்லிணக்க வாரம் மே 27ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை அவதானிக்கப்படுகிறது.


 

தேசிய நல்லிணக்க வாரம் குறித்த முக்கிய விடயங்கள் சில:

  • More than a word.  Reconciliation takes action  - “வார்த்தை மட்டும் போதாது, நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பது இந்த ஆண்டு தேசிய நல்லிணக்க வாரத்தின் கருப்பொருள்.
  • நல்லிணக்கத்தை உருவாக்கவென அமைக்கப்பட்ட நிறுவனம் Reconciliation Australia, ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

 

More than a word.  Reconciliation takes action  - “வார்த்தை மட்டும் போதாது, நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பது இந்த ஆண்டு தேசிய நல்லிணக்க வாரத்தின் கருப்பொருள்.

நல்லிணக்கத்தை உருவாக்கவென அமைக்கப்பட்ட நிறுவனம் Reconciliation Australia, ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி NSW மாநிலத்திலுள்ள Bundjalung தேசத்தை சேர்ந்த Karen Mundine.

"நல்லிணக்கம் என்பது செயலில் காட்டப்பட வேண்டும்.  அத்துடன், தேசிய நல்லிணக்க வார கொண்டாட்டங்களில் ஈடுபட பல எளிய வழிகள் உள்ளன," என்கிறார் Karen Mundine.
Reconciliation Australia
This year marks 20 years of Reconciliation Australia - the national body for reconciliation. Source: Reconciliation Australia

குடிவந்தவர்களும் நல்லிணக்கமும்

இந்நாட்டில் குடிவந்த அனைவரும் தேசிய நல்லிணக்க வார நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டுமென, பல்லின சமூகங்களின் சபையான Federation of Ethnic Communities’ Councils of Australia அல்லது சுருக்கமாக FECCAவின் தலைமை நிர்வாகி Mohammad Al-Khafaji கேட்டுக்கொள்கிறார்.

இங்கு கல்வி கற்காதவர்களுக்கு இது குறித்த போதிய அறிவு இருக்காது என்று கூறும் FECCAவின் தலைமை நிர்வாகி Mohammad Al-Khafaji,
எங்கே ஆரம்பிப்பது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும்
என்கிறார்.

The Encouraging Engagement Guide

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகங்கள் தேசிய நல்லிணக்க வார நிகழ்ச்சிகளுடன் ஈடுபடவும், ஆஸ்திரேலிய மதிப்புகளைப் பற்றி வேறு கோணத்தில் அறியவும் உதவும் ஒரு மதிப்புமிக்க கருவி FECCA வின் Encouraging Engagement என்ற வழிகாட்டி.

குடி வந்தவர்கள் பலர் நல்லிணக்க செயல்முறையில் அலட்சியமாக இருப்பதற்கான காரணங்கள் இருக்கலாம் என்று Karen Mundine கூறுகிறார். இருந்தாலும் இந்த முறை தேசிய நல்லிணக்க வார நிகழ்வுகளில் ஈடுபடுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் அவர்.  தடைகளை உடைத்து குடிவந்தவர்களுக்கு  ஊக்கமளிக்கும் வகையில் ஒரு வழிகாட்டியை FECCA உருவாக்கியுள்ளது என்கிறார் Karen Mundine.


The Encouraging Engagement guide என்ற வழிகாட்டி, சில அர்த்தமுள்ள செயல்பாடுகளைப் பரிந்துரைக்கிறது:

  • ஒரு நல்லிணக்க செயல் திட்டத்தை உருவாக்குங்கள்
  • தேசிய நல்லிணக்க வார நிகழ்வுகளில் ஈடுபடுங்கள்
  • NAIDOC வாரத்தைக் கொண்டாடுங்கள்
  • பூர்வீக குடி மக்களின் வரவேற்பு விழாக்களான,  Welcome to Country ceremony அல்லது Smoking Ceremony என்பவற்றை உங்கள் சமூக நிகழ்வுகளில் நடத்த பூர்வீக குடி மக்களை அழையுங்கள்
  • கலாச்சார ரீதியாக எல்லோரையும் உள்ளடக்கிய பணியிடத்தை உருவாக்க பாடுபடுங்கள்

Victoria மாநிலத்தின் Geelong நகரிலுள்ள Diversitat முதியோர் ஆதரவு சேவையின் முன்னெடுப்பில் Wathaurong தேச பூர்வீக குடிமக்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் வாழும் Karen மற்றும் Karenni சமூகத்தினர் இணைந்து ஒரு நீர்த்தடாகத்தை உருவாக்கியுள்ளார்கள்.

அத்துடன், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாக்குவதன் மூலம் பல்கலாச்சார மக்கள் ATI மற்றும் LGBTI சமூகத்தினரை ஒன்றிணைத்துள்ளது என்கிறார் Diversitat முகாமையாளர் Robyn Martinez.

இந்த வெவ்வேறு குழுக்களும், தங்களுக்கிடையில் சில பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன என்பதை உணர்ந்துள்ளார்கள் என்கிறார் Robyn Martinez.

இந்த இணைப்பின் விளைவாக, புரிந்துணர்வு, நட்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் உயர்ந்த உணர்வுகளை அவர்கள் பரிமாறியுள்ளார்கள் என்கிறார் அவர்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையையும் பார்வையிடுங்கள்

Sovereignty, Treaty, Recognition: Why is January 26 a difficult date for Indigenous Australians?

இந்த ஆண்டின் கருப்பொருள் “வார்த்தை மட்டும் போதாது, நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பதால் துணிச்சலான மற்றும் மிகவும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் பங்கு உண்டு என்று Karen Mundine கூறுகிறார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையையும் பார்வையிடுங்கள்

The journey to the Uluru Statement from the Heart


 

தேசிய நல்லிணக்க வாரம் குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ள, Reconciliation Australia அமைப்பின் இணையதளம் வை பார்வையிடவும்.  வின்,  என்ற வழிகாட்டியை அவர்களது இணையதளம் இலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


[node_list title= "இதனையும் பார்வையிடுங்கள்"  uuid="6fcb391f-9d74-4990-8a69-13da898bcd9c"]




 


Share
Published 27 May 2021 6:13pm
By Melissa Compagnoni


Share this with family and friends