Key Points
- கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுடைய உடல்களில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன
- தடுப்பூசி போட்டுக் கொண்டால் நீண்டகால விளைவுகள் இருக்காது, தொற்றை மற்றவர்களிடம் பரப்பும் வாய்ப்பும் இல்லை: ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை
- WHO adநோய்த்தொற்று வராமலும், வந்திருந்தால் மீண்டும் வராமலும் எம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று WHO அறிவுறுத்துகிறதுvises residents to avoid infection and reinfection
COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் தொற்று ஒருமுறையேனும் ஏற்படாதவர்களை விட, கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டிய தேவையிலிருந்து அதிக பாதுகாப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று 26 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலான பகுப்பாய்வு காட்டுகிறது.
“கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், ஒருவருக்குக் கடுமையான கோவிட்-19 வருவதற்கான வாய்ப்பு அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை 95 சதவீதம் குறைவாக உள்ளது” என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
“ஒரு வருடத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட ஆனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு 75 சதவீதம் குறைவான வாய்ப்பு உள்ளது” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
இருந்தாலும் கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒருவருக்கு தொற்று மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 42 சதவீதம் குறைவு. மற்றவர்களுக்கு 25 சதவீதம் குறைவான வாய்ப்பு மட்டுமே இருக்கிறதுWHO
தடுப்பூசி போட்டுக் கொள்வதால் அல்லது தொற்று ஏற்படுவதால் உடலில் உருவாக்கப்படும் Antigen எனப்படும் எதிரியாக்கி மீண்டும் மீண்டும் வெளிப்பட வகை செய்யப்பட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் antibodyகளை உற்பத்தி செய்ய எமது உடல் தூண்டப்படுகிறது என்று நாட்டின் சுகாதாரத் துறை கூறுகிறது.
மற்றவர்களை விட, கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் COVID Antigenகளை அடிக்கடி ‘சந்தித்திருக்கிறார்கள்’.
இதற்காக, எல்லோரையும் தொற்று ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு ஊக்குவிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் COVID-19 முன்னணி தொழில்நுட்பவியலாளர் Maria Van Kerkhove கூறினார்.
“நான் இதற்கு முன்னர் பல முறை கூறியுள்ளேன், நான் அதைத் தொடர்ந்து கூறுவேன்: தொற்று (முதல் முறையோ மறுபடியோ) ஏற்படுவதைத் தவிர்க்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதன் நன்மைகள்
பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நோயெதிர்ப்பு சக்தியை, தடுப்பூசிகள் தூண்டுவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
“இயற்கையாக ஒரு வைரஸை ஒருவர் எதிர்கொள்ளும்போது, உடலில் அது ஏற்படுத்தும் தாக்கம், பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது ஏற்படும் தாக்கத்தை விடப் பெரியதாக இருக்கும். இதனால் அவர் அனுபவிக்கும் அறிகுறிகள் மோசமாக இருக்கும், அத்துடன் உடல்நிலை மேலும் சரியில்லாமல் ஆக்கும்” என்று SBSஇடம் சுகாதாரத் துறை கூறியது.
நீண்ட நாட்கள் Covidதொற்றின் தாக்கம் மற்றும் நோய்த்தொற்று பரவுவதற்குத் தடுப்பூசி வழிவகுக்காதுAustralian Department of Health
ஒருவரின் வயது மற்றும் அவருடைய உடல் நிலையைப் பொறுத்து, தடுப்பூசி ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி ஒருவருக் கொருவர் மாறுபடும் என்று அரசு கூறியது.
“வயதானவர்களுக்கும் கூட வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுப்பூசி உருவாக்குகிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன,” என்று அது கூறியது.
நோய்த்தொற்று முன்னர் ஏற்பட்டவர்களும் தடுப்பூசி போட வேண்டுமா?
“COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடையே கூட, தடுப்பூசியின் அவசியத்தை எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன” என்று இந்தப் பகுப்பாய்வை WHOவுடன் இணைந்து நடத்திய என்ற ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த Dr Niklas Bobrovitz கூறினார்.
மக்களிடையே வலுவான கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா?
கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி குறித்து, நாட்டில் அறிவு வளர்ந்து வருகிறது என்றும், Lancetஇல் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் Steve Robson கூறினார்.
“அனைத்துத் தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்வது நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. அத்துடன், நீங்கள் தொற்றை வேறொருவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது” என்று பேராசிரியர் Steve Robson கூறினார்.
“தொற்றினால் உங்களுக்கு ஆபத்து குறைவாக இருந்தாலும், தடுப்பூசி போடத் தேவையில்லை என்று நினைக்க வேண்டாம். மிகவும் ஆபத்தில் இருப்பவர்களைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.”
வைரஸின் புதிய திரிபுகளுக்கெதிராக தற்போதைய தடுப்பூசிகள் மற்றும் ஏற்கனவே நோய்த்தொற்று ஏற்பட்டதால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்திகள் எவ்வளவு பாதுகாப்பை வழங்கும் என்று கணிப்பது கடினம் என்று சுகாதாரத் துறை கூறியது.
“நோயெதிர்ப்பிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்ட புதிய வைரஸ் மாறுபாடுகள் உருவாகும் என்று சமீபத்திய நம்நாட்டு மற்றும் உலகளாவிய அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. இதனால், தொற்று பரவலின் புதிய அலைகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்.”
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.