எதிர்வரும் ஜுலை 1 முதல் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கென எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக்கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
கடந்த 2015-இல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் புகைப்படங்கள் தெளிவற்று இருந்ததாகவும், இவற்றில் மிகமுக்கிய பிரச்சினையாக மூக்குக்கண்ணாடியே காணப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் இந்நிலையை மாற்றும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவர தீர்மானித்ததாகவும் பாஸ்போர்ட் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஒளியை பார்க்க முடியாத பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு அண்மையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே இக்கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுமெனவும், இதற்கு மருத்துவரின் சான்றிதழ் கையளிக்கப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Glasses will be banned from Australian passport photos. Photo: Australian Passport Office Source: Australian Passport Office
ஜுலை 1-க்குப் பின்னர் பாஸ்போர்ட் எடுக்கவிருப்பவர்களுக்கே இக்கட்டுப்பாடு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.