முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Daryl Maguire விவகாரத்தைக் கையாண்ட முறையில் Gladys Berejiklian பொது நம்பிக்கையை மீறினாரா என்பதை விசாரிக்க பொது விசாரணைகளை நடத்தப் போவதாக ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணையம் (Independent Commission Against Corruption சுருக்கமாக ICAC) இன்று காலை அறிவித்தது.
Wagga Wagga தொகுதி உறுப்பினர் Daryl Maguire உடன், Gladys Berejiklian ஒரு தனிப்பட்ட உறவில் இருந்தார். அதே சமயம், தனது பொது அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற வளங்களைத் தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக Daryl Maguire பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது.
தனது கட்சி ஒரு புதிய மாநில தலைவரை நியமித்ததும், தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக Gladys Berejiklian அறிவித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.