சிட்னி குடியிருப்பாளரும் மூன்று குழந்தைகளின் தாயுமான Jenny Choo, கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை ரத்து செய்வதற்கான தேசிய அமைச்சரவையின் முடிவு குறித்து மகிழ்ச்சியடையவில்லை. மேலும் இம்முடிவு "தவறானது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஐந்து வயதிற்குட்பட்ட, கோவிட் தடுப்பூசிக்கு தகுதி பெறாத தனது குழந்தைகளைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.
"கோவிட் தொற்றாளர்கள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்பதால் குழந்தைப் பராமரிப்பு மயத்திற்குச் செல்லும் என் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கோவிட் தொற்று பரவும் சந்தர்ப்பம் உள்ளது" என்று Jenny Choo, SBS இடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு சுற்றுக்களுக்கு தகுதியுடையவர்கள். அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதி உள்ளது.
கோவிட் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது
கோவிட் நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் குறைந்துவிட்ட போதிலும், அரசும் மக்களும் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை இழக்கக்கூடாது என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Steve Robson கூறுகிறார்.
கோவிட் இன்னும் நமது ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சுகாதார அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது
தடுப்பூசி மூலம் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக பேராசிரியர் Robson கூறுகிறார். மேலும் வட அரைக்கோளத்தில் மற்றொரு அலை உருவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
புதிய மாற்றங்களுக்கு மத்தியில் வேலை செய்யும் இடத்தில் கோவிட் தொற்றைத் தவிர்ப்பது எப்படி?
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தொழிலாளர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொண்ட அதே நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"கோவிட்-19 இலிருந்து ஒருவரையொருவர் பாதுகாக்க எது சிறந்தது என்பதை அனுபவத்திலிருந்து நாம் அனைவரும் அறிவோம், எனவே தயவுசெய்து, அந்த எளிய ஆனால் முக்கியமான நடவடிக்கைகளைத் தொடரவும்" என்று NSW தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant கூறுகிறார்.
"மூக்கு ஒழுகுதல், தொண்டை நோவு, இருமல் உட்பட சளி அல்லது flu போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் கோவிட் சோதனையையும் செய்து கொள்ளுங்கள்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
பணியிடத்திற்கு பாதுகாப்பாக திரும்புவது குறித்து தொழிலாளர்கள் தங்கள் முதலாளியிடம் பேச வேண்டும் என்று Dr Chant கூறுகிறார்.
ஒரு பணியிடத்தில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் அவற்றின் சொந்த work health and safety சட்டங்களைக் கொண்டுள்ளன.
பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவது ஒரு முதலாளியின் பொறுப்பாக இருந்தாலும், ஊழியர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனித்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காததை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளனர்.
"கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு தொற்றுநோயைப் பரப்பக்கூடிய வழிகளைக் குறைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று பேராசிரியர் Robson அறிவுறுத்துகிறார்.
தொற்றுக்குள்ளானவரிடமிருந்து எத்தனை நாட்களுக்கு நோய் பரவக்கூடும்?
கட்டாய சுய-தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ளபோதிலும், ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் காலம் மாறவில்லை.
தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து 10 நாட்கள் வரை மற்றவர்களுக்கு அத்தொற்று பரவக்கூடும் என்று Dr Chant கூறுகிறார்.
ஆனால் அறிகுறிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், அறிகுறிகள் நீடிக்கும் வரையிலும் அவர்களிடமிருந்து தொற்று பரவக்கூடும்.
கோவிட் தொற்றுடன் இருப்பவர் வீட்டிற்குள்ளும் பொது போக்குவரத்திலும் முகக்கவசத்தை அணியுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
அவர்கள் பெரிய கூட்டங்கள், நெரிசலான உட்புற இடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வயதானவர்கள் அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பு போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களுக்குச் செல்வதை குறைந்தது ஏழு நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என Dr Chant மேலும் கூறுகிறார்.
தேவையான கோவிட் தடுப்பூசிகளைப் போட்டிருப்பது கோவிட் நோய்க்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் close contact என்றால் என்ன செய்வது?
NSW Health, close contacts என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது:
- அறிகுறிகளைக் கண்காணிக்கவும்.
- பரிசோதனை செய்வதுடன் நோய்வாய்ப்பட்டால் வீட்டிலேயே இருக்கவும்.
- ஏழு நாட்களுக்கு மருத்துவமனை, முதியோர் அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களைத் தவிர்க்கவும்.
- கடுமையான நோய் அபாயத்தில் உள்ளவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும்.
- வீட்டிற்குள்ளும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவசத்தை அணியவும்.
- அடிக்கடி RAT சோதனையை செய்யவும்
சிலருக்கு நிம்மதி
கட்டாய தனிமைப்படுத்தலின் முடிவு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு பெரிய நிம்மதி என சிலர் விவரிக்கின்றனர்.
"இனி மன அழுத்தமும் பயமும் இல்லை. வயது மற்றும் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கோவிட் உடன் வாழ்ந்த அனுபவம் உண்டு. இப்போது பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச்சென்று வாழ வேண்டிய நேரம் இது" என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சங்கீதா கூறுகிறார்.
சிறப்புக் கல்வி ஆசிரியரும் ஐந்து குழந்தைகளின் தாயுமான Kelly Ford, கோவிட் தனிமைப்படுத்தல் விதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையானது "முற்றிலும் அற்புதமானது" என்று விவரிக்கிறார்.
கோவிட் கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில் பணி, பள்ளி அல்லது கல்வி மையங்களுக்குத் திரும்புவதைப் பற்றி கவலைப்படும் ஆஸ்திரேலியர்கள் அந்தந்த மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் உதவியை நாடலாம்.
ACT — Canberra Health Services Access Mental Health on 1800 629 354
NSW — Mental Health Line on 1800 011 511
NT — Northern Territory Mental Health Line on 1800 682 288
QLD — 1300 MH CALL: Mental health access line on 1300 642 255
SA — Beyond Blue Coronavirus Mental Wellbeing Support Service on 1800 512 348
TAS — Mental Health Service Helpline on 1800 332 388
VIC — Head to Help on 1800 595 212
WA — Mental Health Emergency Response Line on 1300 555 733
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது