நியூ சவுத் வேல்ஸின் எல்லையில் உள்ள நகரங்களுக்கான அவசரகால வெளியேற்ற எச்சரிக்கையை, விக்டோரியாவின் மாநில அவசர சேவை (SES) புதுப்பித்துள்ளது.
இப்போது புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கையில் Moira Lakes சாலை மற்றும் Broken Creek சாலைக்கு இடையே Barmahவின் வடக்கே வசிப்பவர்களும் அடங்குவர்.
எல்லையோர நகரங்களான Barmah மற்றும் Lower Moiraவில் வசிப்பவர்களுக்கான வெளியேற்ற உத்தரவுகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
42 Robertson தெருவில் உள்ள Nathalia சமூக விளையாட்டு மையத்தில், அவசரகால நிவாரண மையத்தை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
விக்டோரியாவின் Echuca மற்றும் Echuca கிராமத்தின் பகுதிகளுக்கும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் இப்போது வெளியேறவில்லை என்றால், பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படலாம். நீங்கள் வீட்டிலேயே தங்குவதற்குத் தீர்மானித்தால் அவசர சேவை பிரிவினர் உங்களுக்கு உதவ முடியாமல்போகலாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Murray creeps இல் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால், அடுத்த 24 முதல் 48 மணிநேரம் Echucaவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று விக்டோரிய அவசரகால மேலாண்மை ஆணையர் Andrew Crisp, Channel Sevenஇடம் கூறினார்.
வெள்ள அவசரநிலை முடிவடைய இன்னும் பல நாட்கள் எடுக்கும் என்று VIC SES chief operating officer Tim Wiebusch கூறியுள்ளார்.
730 வெள்ள மீட்புகள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட உதவி கோரிக்கைகளுக்கு VIC SES பணியாளர்கள் பதிலளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மற்றும் குயின்ஸ்லாந்து SES அதிகாரிகளும், விக்டோரியா மாநிலத்தில் நிவாரணப் பணிகளில் உதவி வருகின்றனர்.
கிழக்கு குயின்ஸ்லாந்து, NSW, வடக்கு விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் தூர கிழக்குப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேநேரம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை அடுத்த வாரம் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது திடீர் வெள்ளம், சேதப்படுத்தும் காற்று மற்றும் hail-க்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.