சிட்னி தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் மரணம்!

சிட்னியின் தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மரணமடைந்த அனைவரும் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

2022-09-07_9-33-33.png

Police attended the 'horrific' scene where five teenagers died after a car smashed into a tree in Buxton in southwest Sydney. Source: ABC Australia

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், சிட்னியில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் உள்ள Macarthur பிராந்திய கிராமமான Buxton அருகே Orange Road மற்றும் East Parade intersection-இல் Nissan ute ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்ததாக பொலீசார் கூறுகின்றனர்.

வாகனத்தின் ஓட்டுநர் மாத்திரம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த வாகனத்தில் 18 வயது ஓட்டுநர், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் பயணம்செய்திருந்ததாகவும், மரணமடைந்தவர்கள் முறைப்படி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
14 -16 வயதுகளிலுள்ள இந்த 5 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், இவர்கள் Picton High பள்ளி மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
——————————————————————————————
Readers seeking support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at  and on 1300 22 4636. 
——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 7 September 2022 12:58pm
Updated 7 September 2022 1:11pm
Source: SBS

Share this with family and friends