கோவிட் நெருக்கடியை ஆஸ்திரேலியா கையாண்டமை பற்றிய ஒரு சுயாதீன மதிப்பாய்வு, frontline தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்லினசமூகங்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் ஆகிய தரப்பினரே தொற்றுநோயின் "சுமைகளை சுமந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
அரசுக்களும் வணிகங்களும் பொருளாதார ஆதரவை நியாயமாகவும் சமமாகவும் வழங்கியிருக்க வேண்டும், முடக்கம் மற்றும் எல்லை மூடல்கள் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும், வயதான ஆஸ்திரேலியர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கை கவலைகளை எழுப்புவதாகவும், எதிர்காலத்தில் லேபர் அரசு மேற்கொள்ளும் எந்தவொரு தேசிய விசாரணைக்கும் இது உதவும் எனவும் பிரதமர் Anthony Albanese கூறினார்.
“தொற்றுநோயிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அறிக்கைக்கு Andrew Forrest's Minderoo Foundation, Paul Ramsay Foundation மற்றும் John and Miriam Wylie Foundation ஆகியன நிதியுதவியளித்திருந்தன.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் ஆஸ்திரேலியர்கள், டிசம்பர் 31 வரை, எந்தவொரு GP அல்லது பிற மருத்துவர்களால் வழங்கப்படும் டெலிஹெல்த் சேவைகளுக்கான Medicare rebate தொடர்ந்து பெறலாம் என்று ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
12-17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியாக Moderna கோவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த TGA-சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இறுதி ஒப்புதலுக்காக சுகாதார அமைச்சருக்கு பரிந்துரைக்கும் முன், ATAGI-நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இந்த பூஸ்டர் தடுப்பூசியின் நன்மையை மதிப்பிடவுள்ளது.
PCR சோதனைக்கான தேவை குறைவதால், மேற்கு ஆஸ்திரேலியா இந்த மாத இறுதிக்குள், Rockingham General Hospital public drive-through clinic, Royal Perth Hospital walk-in clinic, Broome Health Campus மற்றும் Bunbury Health Campus கிளினிக்குகளை மூடுகிறது.
உலகளாவியரீதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக எட்டு வாரங்களாக குறைந்துள்ளன, ஆனால் கோவிட் தொடர்ந்து பொது சுகாதார அவசரநிலையாகவே உள்ளது என WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.
ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உலகளவில் அதிக தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.