சிட்னி அலுவலக கட்டிடத்திலிருந்து விழுந்து இந்தியப்பெண் மரணம்!

பிரபல கணக்கியல் நிறுவனமான Ernst and Young சிட்னி அலுவலக கட்டிடத்திலிருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமடைந்த செய்தி கடந்தவாரம் வெளியாகியிருந்தநிலையில், குறித்த பெண் இந்தியா, கேரளாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Ernst & Young logo

Credit: Cristina Arias/Getty Images

கேரளா பாலக்காடைச் சேர்ந்த 33 வயதுடைய இப்பெண், Ernst and Young நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 27 சனிக்கிழமை நள்ளிரவு குறித்த பெண்ணின் சடலம் George Street - இலுள்ள Ernst and Young கட்டடத்தின் கீழிருந்து மீட்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு Ernst and Young கட்டடத்திற்கு அருகிலுள்ள Ivy-இல் குறித்த நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட இப்பெண், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் அலுவலகக் கட்டடத்திற்கு வந்ததாகவும், அவரிடமிருந்த security card-ஐப் பயன்படுத்தி அக்கட்டடத்தின் உயரமான இடத்திற்குச் சென்றதாகவும், அங்கிருந்து கீழே விழுந்து அவர் மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பெண் மரணமடைந்த சமயம் அவரது கணவர் சிங்கப்பூரிலிருந்து சிட்னி வந்த விமானத்தில் பயணம்செய்துகொண்டிருந்ததாகவும், சிட்னியை வந்தடைந்த பின்னர் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை தமது சிட்னி அலுவலக கட்டிடத்தில் இடம்பெற்ற இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என Ernst and Young நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இம்மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பதாக வெளியான செய்திகள் தொடர்பில், SBS மலையாளம் Ernst and Young-ஐ தொடர்புகொண்டு கேட்டபோது, தனியுரிமை மற்றும் பொலீஸ் விசாரணை காரணமாக இந்த தகவலை வெளியிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் இல்லை எனவும், பொலிஸாரின் விசாரணைகளுக்கு தாம் முழு ஆதரவை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மரண விசாரணை அதிகாரியிடம் தமது அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் SBS மலையாளத்திடம் தெரிவித்தனர்.
——————————————————————————————
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at 
 and on 1300 22 4636. 
——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 1 September 2022 3:04pm
Updated 1 September 2022 3:11pm
Source: SBS

Share this with family and friends