Latest

வாகனத்துடன் வெள்ளநீரில் சிக்கி இருவர் மரணம்: ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவின் வெள்ளம் மற்றும் பிற வானிலை தொடர்பான நிகழ்வுகள் குறித்த பிந்திய தகவல்கள்.

AUSTRALIA-WEATHER-FLOODS

Emergency services vehicles are seen by a flooded road following torrential rain in Sydney. (file) Source: AFP / SAEED KHAN/AFP via Getty Images

வெள்ளநீரில் வாகனம் ஓட்டிச்சென்று இருவரின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில், ஓட்டுநர் ஒருவர் மீது நியூ சவுத் வேல்ஸ் பொலிசார், வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

Guildford-டைச் சேர்ந்த 41 வயதுடைய நபரை செவ்வாயன்று கைது செய்ததாகவும், கொலைக்குற்றச்சாட்டு மற்றும் ஆபத்தானமுறையில் வாகனம் ஓட்டியதாக இவர்மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 31 அன்று இடம்பெற்றிருந்த மரணங்கள் தொடர்பிலேயே இவர்மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அன்றையதினம் இரவு சுமார் 11.15 மணியளவில் Mitsubishi Triton ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, Goulburnக்கு அருகிலுள்ள Preston Creek Causewayக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

"வாகனத்தின் cabinனில் இருந்த இரண்டு ஆண்கள் பாதுகாப்பாக நீந்திவந்து அவசர சேவைகளை தொடர்பு கொண்டதாகவும் வாகனத்தின் tray-இல் பயணம்செய்த 30 மற்றும் 32 வயதுடைய மேலும் இரண்டு ஆண்கள் வாகனத்துடன் நீரில் மூழ்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலேயே ஓட்டுநர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செவ்வாயன்று, Barmedman இல் Williams Crossing சாலைக்கு அருகே வெள்ளநீரில் இருந்து ஒரு மனிதனின் உடலை NSW மாநில அவசர சேவை மீட்டுள்ளது.

காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த 89 வயதுடையவரின் உடலாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

வானிலை ஆய்வு மையத்தின் நீட்டிக்கப்பட்ட வெள்ளக் கணிப்புகள் காரணமாக, Tilpaவிற்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கையை NSW SES மீண்டும் வெளியிட்டுள்ளது.

Tilpaவில் உள்ள Darling நதி நீர்மட்டம்13.06 மீட்டராக உயர்ந்து தற்போது 13.04 ஆக காணப்படுகிறது.

Balranald இல் உள்ள Murrumbidgee ஆற்றின் குறுக்கே பெரும் வெள்ளம் தொடர்கிறது என்றும், டிசம்பர் இறுதி வரை நதி 7.10 மீட்டர் வெள்ள மட்டத்திற்கு மேல் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
NSW-விக்டோரியா எல்லைக்கும் வெலிங்டனுக்கும் இடையே உள்ள Murray ஆற்றுப்பகுதியில் அனைத்து அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளையும் "சில நாட்களுக்கு" தெற்கு ஆஸ்திரேலியா நிறுத்தியுள்ளது.

அடுத்த ஏழு நாட்களில் சில இடங்களில் ஆற்று நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமண்டல பசிபிக் பகுதியில் La Niña தொடர்கிறபோதிலும், இதன் வலிமை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

இதன் காரணமாக, வரவிருக்கும் மாதங்களில் வறண்ட மற்றும் வெப்பமான நிலைக்கு ஆஸ்திரேலியா திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.

பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 21 December 2022 5:12pm
Updated 21 December 2022 5:39pm
Source: SBS


Share this with family and friends