இந்தோனேசியாவில் உள்ள தனிம்பார் பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலை கடலுக்கடியில் நிலநடுக்கம் 97கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் கூறுகிறது.
அதிகாலை 3.15 மணியளவில் இந்த நிலநடுக்கத்தால் டார்வின் மக்கள் விழித்தெழுந்துள்ளனர்.என ஏபிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பு, தீவுகள் அல்லது பிரதேசங்களுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று கூட்டு ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் மதிப்பிட்டுள்ளது.
டார்வின் நகரத்தில் 40 ஆண்டுகளில் உணர்ந்த மிக மோசமான நிலநடுக்கம் என்றும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் அது உறுமல் சத்தத்துடன் மேலும் மேலும் அதிர்ந்ததாகவும் டார்வில் வசிக்கும் Trevor Power Nine network-இடம் கூறினார்.
தனது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடியதாகவும் , அங்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் குலுங்கிக்கொண்டிருந்ததாகவும் மேலும் நாய்கள் செய்வதறியாது பைத்தியம் பிடித்தது போல் இருந்தன என்று திரு Power கூறினார்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
டார்வின், பால்மர்ஸ்டன், கேத்தரின் மற்றும் ஆர்ன்ஹெம் லேண்ட் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள Cape York-இல் உள்ள Weipaவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது இந்த கட்டத்தில் தெளிவாக தெரியவில்லை என ஏபிசி தெரிவித்துள்ளது.
———————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.