Latest

'அடுத்த அலை' : NSW & விக்டோரியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

VICTORIA CORONAVIRUS COVID19

Passengers wearing face masks at Southern Cross Station in Melbourne. (file) Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள், கோவிட் தொடர்பிலான வாராந்திர அறிக்கையில், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

நியூ சவுத் வேல்ஸில், புதிய தொற்றாளர்களின் வாராந்திர எண்ணிக்கை 10,050 இலிருந்து 12,450 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இது 24 சதவீதம் அதிகமாகும்

இதேபோல் விக்டோரியாவில் 8,537 இல் இருந்து 10,226 ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாகும்.
வரும் வாரங்களில் மாநிலத்தில் தொற்றுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என NSW தலைமை மருத்துவ அதிகாரி Dr Kerry Chant நேற்று தெரிவித்தார்.

"நாங்கள் அடுத்த கோவிட் அலைக்குள் நுழைகிறோம் என்பதை இது காட்டுகிறது" என அவர் ஒரு காணொளியில் கூறினார்.

கடந்த வாரம், விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton அவர்களும் விக்டோரியா "மற்றொரு கோவிட் அலையின் தொடக்கத்தில்" இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய குழந்தைகளில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தேசிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

"இது வைரஸிற்கான மூக்கு மற்றும் தொண்டை swab பரிசோதனையின் அடிப்படையில் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்" என்று NCIRS இன் தொற்று நோய் நிபுணர் மற்றும் paediatric study lead டாக்டர் அர்ச்சனா கொய்ராலா கூறினார்.

கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபான Omicronஇன் BA.1 துணைத்திரிபிலிருந்து பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படும்,Pfizerஇன் bivalent கோவிட்-19 தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு booster தடுப்பூசியாக Therapeutic Goods Administration (TGA) அங்கீகரித்துள்ளது.

நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு-Australian Technical Advisory Group on Immunisation இத்தடுப்பூசியை மதிப்பாய்வு செய்யவுள்ளது

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் கோவிட் தடுப்பூசிகள், அதனை போட்டுக்கொண்ட மாதத்தில், சிறிய தற்காலிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
35 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெண்கள், நீரிழிவு போன்ற சில நோய் நிலைமைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கோவிட் தொற்றின் போது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலருக்கு, Long Covid உருவாகும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது.

அக்டோபர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், புதிய வாராந்திர உலகளாவிய கோவிட்-19 தொற்றுகள் 17 சதவீதமும், இறப்புகள் ஐந்து சதவீதமும் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, சீனா மற்றும் கொரியா ஆகியவை அதிக உலகளாவிய கோவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 4 November 2022 4:44pm
Updated 4 November 2022 5:16pm
Source: SBS


Share this with family and friends