Latest

கோவிட் தொடர்பிலான என்னென்ன கட்டுப்பாடுகள் இனி நடைமுறையில் இருக்கும்?

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

AUSTRALIAN DAILY LIFE

Workers and pedestrians are seen during lunch time at Circular Quay on a sunny day under the canopy of jacaranda trees in Sydney. (file) Source: AAP / BRENDAN ESPOSITO/AAPIMAGE

இன்று அக்டோபர் 14 முதல், கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியதில்லை.

முதியோர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, பூர்வீககுடி பின்னணி கொண்டவர்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ பராமரிப்புத் துறைகளில் உள்ள பணியாளர்கள் தவிர, ஏனையோருக்கான Pandemic Leave Disaster கொடுப்பனவும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நோய் பரவும் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால், அவர்கள் ஏழு நாட்களுக்குப் பிறகு மட்டுமே பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுடன், நோய் அறிகுறியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று NSW Health கூறியுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை பதிவுசெய்வது சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் இன்னமும் கட்டாயமாகும்

நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் நாட்டில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான கட்டாய தடுப்பூசி நிபந்தனை ஆகியவற்றைத் தவிர, பெரும்பாலான கோவிட் விதிகள் முடிவுக்கு வந்துள்ளன.
Australian National University மேற்கொண்ட புதிய ஆய்வின்படி 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் long COVID-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது long COVID-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவிக்கக்கூடும் என இந்த ஆய்வில் அங்கம்வகித்த பேராசிரியர் Nicholas Biddle கூறியுள்ளார்.

கொரோன வைரஸ் மற்றும் அதன் திரிபான ஓமிக்ரானின் BA.1 துணை திரிபிலிருந்து பாதுகாப்பு வழங்கக்கூடிய Moderna தடுப்பூசியை ஆஸ்திரேலியர்கள் இப்போது பெற்றுக்கொள்ள முடியும்

எவ்வாறாயினும், இத்தகைய தடுப்பூசிகளைப் பரிந்துரைக்க தற்போதைய தரவு போதுமானதாக இல்லை என்று WHO நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கடந்த மாதம் கோவிட் தடுப்பூசியில் 20 சதவீதம் குப்பையில் போட போடப்பட்டதாக The Guardian தெரிவித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய அரசு நடத்தும் தடுப்பூசி கிளினிக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், GP கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் தடுப்பூசிகள் இன்னமும் கிடைக்கின்றன.

புதிய ஆய்வின்படி தெற்கு ஆஸ்திரேலியாவின் அடுத்த கோவிட் அலை டிசம்பரின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இது முந்தையதை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸை ஒட்டி அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மாநிலமாக தெற்கு ஆஸ்திரேலியா காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட-19 மற்றும் பிற தொற்றுநோய்கள் தொடர்பில் ஆய்வுசெய்த ஒரு சுயாதீன பணிக்குழு, கோவிட்-19 இன் தோற்றம் "பெரும்பாலும் zoonotic" என்று கண்டறிந்துள்ளது. அதாவது வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தாவியிருப்பதாக கண்டறிந்துள்ளது.

மேலும் கோவிட்-19 ஆய்வகத்தில் உருவானது என்பதற்கான "நம்பகமான ஆதாரங்களை" இப்பணிக்குழு கண்டுபிடிக்கவில்லை.

அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிய வாராந்திர உலகளாவிய தொற்றுகளின் எண்ணிக்கை 10 சதவீதமும், இறப்புகள் ஒரு சதவீதமும் குறைந்துள்ளதாக WHO தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் வாராந்திர உலகளாவிய தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 14 October 2022 1:09pm
Updated 14 October 2022 1:50pm
Source: SBS


Share this with family and friends