நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், இறப்புகள் மற்றும் ICUஇல் உள்ளவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
NSW மாநிலத்தில் BA.2.75 நோய்த்தொற்றுகள் அதிகரித்துவருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக NSW Health தெரிவித்துள்ளது.
இருப்பினும், அம்மாநில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் ஏழு நாள் சராசரி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட மிகக் குறைவாகும். அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 இதயத்தை பாதிக்கிறது என குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் 'FLU போன்றது அல்ல' என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்படியான சூழலில் ஆஸ்திரேலியா மிக விரைவாக கோவிட்-19 தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்குவதாக ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Steve Robson தெரிவித்துள்ளார்.
"மற்றொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. விடுமுறை காலத்தில் மற்றொரு அலை ஏற்பட்டால், அது நாட்டிற்கு மோசமான செய்தியாக அமையும். ஏனெனில் அந்த பின்னடைவை எங்களால் சமாளிக்க முடியாது" என்று அவர் AAP-இடம் கூறினார்.
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசியை, TGA- சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம் தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.
இத்தடுப்பூசி ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் (ATAGI) மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் இதுகுறித்து சுகாதார அமைச்சரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படும்
இந்த வயதுகளிலுள்ள எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய குழந்தைகளுக்கு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசியாக Moderna கோவிட் தடுப்பூசி மாத்திரமே தற்போது உள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபுகளில் ஒன்றான ஓமிக்ரானின் BA.5/BA.4 துணை வகைகளை இலக்காகக் கொண்ட இருவகை தடுப்பூசிக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க Moderna நிறுவனத்தை TGA அனுமதித்துள்ளது.
தற்காலிக அனுமதியை வழங்குவதற்கு முன், தடுப்பூசிக்கான மனித மருத்துவ பரிசோதனையை மறுபரிசீலனை செய்வதாக TGA கூறியது.
குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவை கோவிட்-19 தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் மையங்களை மூடியுள்ளன.
இந்த மையங்களை உருவாக்க $1 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டது.
புதிய வாராந்திர கோவிட் தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அக்டோபர் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8,300 இறப்புகளை வியாழக்கிழமை, உலக சுகாதார அமைப்பு பதிவு செய்துள்ளது.
ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான புதிய வாராந்திர தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.