கோவிட் தொற்று விகிதம் குறையலாம், ஆனால் ஆபத்து தொடர்கிறது!

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

NSW CORONAVIRUS COVID19

Infection rate maybe slowing down Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸில், 27,750 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, இது முந்தைய வாரத்தை விட 17.6% அதிகமாகும். கோவிட்-19க்கான PCR பரிசோதனையும் 16.8% அதிகரித்துள்ளது.

விக்டோரியாவில், 22,281 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இது முந்தைய அறிக்கை காலத்தை விட 9.5 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 46 இல் இருந்து இந்த வாரம் 68 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் PCR சோதனைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தொற்று விகிதம் குறைந்து வருவதாக NSW Health கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில் SBS உடன் பேசிய துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Michael Kidd, தொற்றுநோயின் ஆபத்து இன்னும் தொடர்கிறது என தெரிவித்தார்.

கோவிட் நோய்த்தொற்று புத்தாண்டுக்கு அப்பாலும் நீடிக்கும் என அவர் மேலும் கூறுகிறார்.

கோவிட்-19 தொற்றுள்ள விக்டோரிய வாக்காளர்கள், சனிக்கிழமையன்று மெல்பனின் வடமேற்கில் உள்ள drive-through தளத்தில் வாக்களிக்க முடியும்.

நேர்மறை ஆன்டிஜென் சோதனை (RAT) அல்லது நேர்மறை PCR சோதனையை உறுதிப்படுத்தும் ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
ABCயின் கூற்றுப்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன, கடந்த இரண்டு மாதங்களில் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

முகக்கவசத்தை எப்பொழுதும் கைவசம் வைத்திருங்கள், அதனால் கூட்ட நெரிசலான உட்புறப் பகுதிகளான லிஃப்ட், பொதுப் போக்குவரத்து மற்றும் பிற இடங்களில் அவற்றை அணியலாம்.

நியூ சவுத் வேல்ஸில் அனைத்து மருத்துவமனை பகுதிகளிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும்.
முந்தைய அறிக்கையிடல் காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் புதிய உலகளாவிய கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. WHO இன் வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையின் படி, வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கையும் 13 சதவீதம் குறைந்துள்ளது.

ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 25 November 2022 2:07pm
Updated 25 November 2022 2:29pm
By Yumi Oba
Source: SBS


Share this with family and friends