Latest

கோவிட்-19 தொடரப்போகிறது, ஆனால் பெருந்தொற்று அடுத்த ஆண்டு முடியும்: WHO

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

SYDNEY CHRISTMAS FISH MARKETS

Assistants serve customers buying prawns for Christmas at Sydney Fish Market in Pyrmont, Sydney. (file) Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

புதிய வாராந்திர கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் மாறாமல் காணப்படுகிறது.

NSW இல் இவ்வாரம் 40,695 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் 40,194 ஆக இருந்தது.

விக்டோரியாவில் கடந்த வாரம் 27,790 தொற்றுகள் இனங்காணப்பட்ட அதேநேரம் இவ்வாரம் 24,652 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், இரு மாநிலங்களிலும் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

நான்காவது அலை மாநிலத்தில் உச்சத்தை எட்டியுள்ளது என்பதை பல ஆதாரங்கள் வெளிப்படுத்தி நிற்பதாக NSW தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant, தெரிவித்தார். இருப்பினும், மக்களை விழிப்புடன் இருக்குமாறும், கோவிட்-பாதுகாப்பு நடத்தைகளைப் பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
ஜனவரி 1 முதல் மானியத்துடன் கூடிய உளவியல் sessions எண்ணிக்கை, 20இலிருந்து 10 ஆக மாற்றப்படுகிறது.

முந்தைய Morrison அரசு கோவிட் பரவல் அவசர நிலையின்போது 10 அமர்வுகளை கூடுதலாக அறிமுகப்படுத்தியிருந்தது.

மொத்தம் 20 subsidised psychology sessions என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இது இந்த ஆண்டு முடிவடையும் என்றும் சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.

2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் சராசரியாக ஐந்து sessionsஐப் பயன்படுத்தியதாக Mark Butler கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவை "முற்றிலும் சிந்தனையற்ற ஒன்று" என்று எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.
இந்த வாரம் ஆஸ்திரேலிய அரசு 2023க்கான தேசிய கோவிட்-19 சுகாதார மேலாண்மை திட்டத்தையும் வெளியிட்டது.

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பு, எதிர்கால அலைகள் மற்றும் மாறுபாடுகளுக்கு பதிலளிப்பதையும், தடுப்பூசி மற்றும் சிகிச்சையை மேம்படுத்துவதையும், பரவலை மெதுவாக்குவதையும், இந்த தேசிய திட்டம் உறுதி செய்யும் என்று அமைச்சர் Butler கூறினார்.

அரசு கூடுதலாக $2.9 பில்லியனை முதலீடு செய்கிறது எனவும், இந்தத் திட்டம் முதியோர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, பூர்வீக குடிமக்கள் மற்றும் பல்கலாச்சார சமூகங்களுக்கு கூடுதல் உதவியை வழங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

மாநில PCR பரிசோதனை கிளினிக்குகளுக்கான 50/50 நிதி ஏற்பாடுகளை அரசு 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனவரி 1 முதல், இலவச PCR பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு GP referel தேவைப்படும்.
கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கான செலவுகள் தொடர்பிலான 50/50 என்ற மாநிலங்களுடனான தற்காலிக நிதி ஏற்பாட்டை, டிசம்பர் 31க்கு மேல் நீட்டிக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த முடிவை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Steven Robson விமர்சித்துள்ளார்.

புதிய வாராந்திர உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்திற்கும் மேலாக(9700 ) அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு டிசம்பர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த அதன் சமீபத்திய வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் Director-General Tedros Adhanom Ghebreyesus, அடுத்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று நீங்கும் என்று நம்புகிறார்.

"அடுத்த ஆண்டு ஒரு கட்டத்தில், COVID-19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என்று கூற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

நிச்சயமாக இந்த வைரஸ் நம்மைவிட்டு நீங்காது எனவும், அனைத்து நாடுகளும் influenza, மற்றும் RSV உள்ளிட்ட பிற சுவாச நோய்களுடன் அதை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் WHO ஜனவரி மாதம் ஆராயும்.

ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 16 December 2022 4:33pm
Updated 16 December 2022 5:13pm
Source: SBS


Share this with family and friends