Latest

கோவிட் நெருக்கடி கையாளப்பட்ட முறை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும்- பிரதமர்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

ANTHONY ALBANESE COVID VACCINATION

Australian Prime Minister Anthony Albanese receiving his fourth vaccine dose in Sydney. (file) Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE

விக்டோரியாவில் 20 பேர், குயின்ஸ்லாந்தில் 17 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 24 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 73 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மெல்பனில் அமையவுள்ள Modernaவின் புதிய தடுப்பூசி மையம் ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கும் என சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார். மற்ற சுவாச நோய்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தயாரிப்பது தொடர்பில் இந்நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவிட் பரவல் காலத்தின்போது முன்னாள் பிரதமர் Scott Morrison சுகாதாரம் உட்பட குறைந்தது ஐந்து அமைச்சுக்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார் என்பதை பிரதமர் Anthony Albanese உறுதிப்படுத்தியுள்ளார்.

கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சிட்னி 2ஜிபி வானொலி நிலையத்திடம் கருத்துத் தெரிவித்த Scott Morrison, கோவிட் பரவலைக் கையாள்வது தொடர்பிலேயே இந்த நியமனங்கள் செய்யப்பட்டன என்று கூறினார்.

அதேநேரம் கோவிட்-19 நெருக்கடி சூழ்நிலைகள் கையாளப்பட்ட முறைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் Anthony Albanese உறுதியளித்தார்.

Omicron மற்றும் அதன் திரிபுகளைக் குறிவைக்கும் Moderna-வின் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. இத்தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படலாம்.

Pfizer CEO Albert Bourla கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

Pfizer தடுப்பூசியின் நான்கு சுற்றுக்ககளையும் பெற்றுள்ள Albert Bourla மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் antiviral மாத்திரையான Paxlovid-ஐ பயன்படுத்துகிறார் என்றும் Pfizer நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 7,145 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 4,858 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,232 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,145 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,336 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 518 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 412 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

NT-இல் 100 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்

என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 16 August 2022 3:43pm
Updated 16 August 2022 3:51pm
Source: SBS


Share this with family and friends