விக்டோரியாவில் 20 பேர், குயின்ஸ்லாந்தில் 18 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 36 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 78 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 47,419 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும், கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கான அரசின் 'Winter plan'-குளிர்காலத் திட்டத்தை முதியோர் பராமரிப்புத்துறை அமைச்சர் Anika Wells வெளியிட்டார். இந்தத் திட்டத்தில் தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பது மற்றும் வைரஸ் தடுப்புமருந்துகளை வழங்குவது ஆகியவை அடங்கும்.
அமைச்சர் Wells கூறுகையில், முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் பிற அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் முகக்கவசம் ஒரு முக்கியமான பாதுகாப்பு என்றார்.
மேலும் முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்த, ஒவ்வொரு மாநில மற்றும் பிராந்திய தலைமை மருத்துவ அதிகாரிகளுடன், ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பேசியுள்ளார்.
கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன், Coral Princess பயணக் கப்பல் சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டது.
நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை குறித்து, தேசிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk, பிரதமர் Anthony Albanese-ஐ கேட்டுக் கொண்டார்.
ஜூலை 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 116 கோவிட்-19 இறப்புகளை NSW அறிவித்தது. 116 இறப்புகளில் எட்டு, 65 வயதிற்குட்பட்டவர்களில் பதிவாகியுள்ளன.
கோவிட் மற்றும் flu தொற்றுகளிலிருந்து மருத்துவமனைகளின் சுமையை எளிதாக்க நியூசிலாந்து புதிய கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நடவடிக்கைகளில் அதிகமான மக்கள் வைரஸ் தடுப்பு சிகிச்சைகளைப் பெற அனுமதிப்பதும் அடங்கும்.
நியூசிலாந்தில் வசிப்பவர்கள் பொது உட்புற அமைப்புகள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசங்களை அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது வாரமாக, உலகளாவிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வாராந்திர தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 14,235 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,283 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,900 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,761 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்
டஸ்மேனியாவில் புதிதாக 1844 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
ACT- இல் புதிதாக 1367 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT- இல் புதிதாக 494 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.