ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 57 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

The NT has become the first Australian jurisdiction to end mandatory face masks at airport terminals following recommendations from the Australian Health Protection Principal Committee (AHPPC).

The Northern Territory has become the first Australian jurisdiction to end mandatory face masks at airport terminals from 18 June. (file) Source: AAP Image/Bianca De Marchi

விக்டோரியாவில் 18 பேர், குயின்ஸ்லாந்தில் 13 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 14 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ACT பிராந்தியத்தில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 97 பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்று முடிவடைவதற்கான நாள் வெகு தொலைவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் COVID-19 technical தலைவர் Dr Maria Van Kerkove தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 புதன்கிழமை இரவு 11.59 மணிக்கு NT-இன் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழுவின் (AHPPC) பரிந்துரைகளைத் தொடர்ந்து, விமான நிலைய  terminal-களில் கட்டாய முகக்கவச கட்டுப்பாட்டினை முடிவுக்கு கொண்டுவரவுள்ள முதல் பிராந்தியமாக  NT காணப்படுகிறது.

மற்ற ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், terminal-களில் முகக்கவச கட்டுப்பாட்டினை நீக்குவதற்கு முன் அவர்கள் தத்தம் மாநில மற்றும் பிராந்தியத்திலுள்ள பொது சுகாதார உத்தரவுகளை மாற்றியமைக்க வேண்டும். 

எதுஎப்படியிருப்பினும் ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் அனைத்திலும் விமானங்களினுள் முகக்கவசம் அணியவேண்டுமென்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஆஸ்திரேலியாவின் Therapeutic Goods Administration (TGA) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியாக Novavax-ஐ தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  7,260 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,687  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 858 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,184 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,262 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  3 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,664  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  983 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  245 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 June 2022 4:19pm


Share this with family and friends