செப்டம்பர் 11 உடன் முடிவடைந்த வாரத்தில், புதிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 சதவீதமும், இறப்புகள் 22 சதவீதமும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அதிக கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கை, மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் Director-General Tedros Adhanom Ghebreyesus தெரிவித்தார்.
"தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாங்கள் ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை என்றபோதிலும் இதன் முடிவு நெருங்குகிறது" என்று திரு Adhanom Ghebreyesus கூறினார்.
உலக அளவில் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் இறங்குநிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகள் Omicron இன் புதிய துணை வகையான BA.4.6 ஐக் கண்காணித்து வருகின்றனர், இது அமெரிக்காவிலும் UK-இலும் பரவி வருகிறது.
விக்டோரியா சுற்றுலாத் துறையானது கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விக்டோரியாவிற்கு முதல்தடவையாக 2,500 சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பெரிய பயணக் கப்பலை, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் Steve Dimopoulos இன்றையதினம் வரவேற்றார்.
அக்டோபர் பிற்பகுதியில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அதிகமான பயணக் கப்பல்கள் விக்டோரியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இளம் ஆஸ்திரேலியர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய பகுப்பாய்வு காட்டுகிறது.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.