Latest

நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 132 மரணங்கள் பதிவாகின!

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

People in a crowd with two elderly people waring face masks.

Passengers wearing face masks at Southern Cross Station in Melbourne (file). Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

விக்டோரியாவில் 46 பேர், குயின்ஸ்லாந்தில் 20 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 43 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 132 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆரம்பக்கட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி மெதுவாக இடம்பெற்ற அதேநேரம், ஓரளவு பயனுள்ளதாக இருந்ததாகவும், ஆனால் இத்திட்டம் காலப்போக்கில் பெருமளவில் வெற்றிபெற்றதாகவும் Australian National Audit அதன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள், மற்றும் பூர்வீக குடியின மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது ஆரம்பகட்ட இலக்காக தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த இலக்கை முழுமையாக எட்டுவதற்கு அரசு தவறிவிட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, நோய்வாய்ப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை brain fog, dementia மற்றும் psychosis ஆகியவற்றின் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக Lancet Psychiatry journal-இல் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.



உலகளாவிய குரங்கம்மை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 20 சதவீதம் (சுமார் 7500 தொற்றாளர்கள்) அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அனைத்து தொற்றுகளும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே கிட்டத்தட்ட தொடர்ந்து பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் director-general Dr Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார். 

NSW மற்றும் விக்டோரியாவில் தலா 36, குயின்ஸ்லாந்தில் மூன்று, மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்று, ஆஸ்திரேலிய தலைநகர் பிராந்தியத்தில் இரண்டு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு உட்பட 82 குரங்கம்மை தொற்றாளர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக சமீபத்திய தரவு காட்டுகிறது.

கடந்த நான்கு வாரங்களில் கோவிட் இறப்புகள் 35 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் உலகளவில் 15,000 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் Dr Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 

Omicron வகைகளை குறிவைத்து, மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளை வெளியிடுவதில், பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா விரைவில் இரண்டாவது நாடாக மாறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்


நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 8,149 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 43 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 4,416 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 46 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,060 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,210 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,170 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 444 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 384 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்

என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 18 August 2022 3:08pm
Updated 18 August 2022 3:13pm
By Renuka
Source: SBS


Share this with family and friends