697 நாட்களின் பின் மேற்கு ஆஸ்திரேலிய மாநில எல்லை திறக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 03ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Federal Opposition Leader Anthony Albanese arrives at Perth Domestic Airport in Perth, Thursday, March 3, 2022.

Federal Opposition Leader Anthony Albanese arrives at Perth Domestic Airport in Perth, Thursday, March 3, 2022. Source: AAP Image / RICHARD WAINWRIGHT

697 நாட்களின் பின் மேற்கு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு திறந்துள்ளது. இன்றையதினம் 22 உள்நாட்டு மற்றும் 5 சர்வதேச விமானங்களில் சுமார் 5000 பயணிகள் பெர்த் விமான நிலையத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று சுற்று கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், பயணம் செய்வதற்கு முன்னர் travel entry pass-ஐப் பெற்றிருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளின்கீழ் மேற்கு ஆஸ்திரேலிய எல்லை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 44 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 11,338 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 1,035 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,093 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 262 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 38 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,479 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 315 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,117 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 690 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 39 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மேற்கு  ஆஸ்திரேலியா மாநிலத்தில், புதிதாக 2,420 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.22 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

தெற்கு மாநிலத்தில், புதிதாக 2,307 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 104 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 3 March 2022 3:10pm
Updated 3 March 2022 3:24pm


Share this with family and friends