மேற்கு ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு 15 இலவச RAT உபகரணங்கள் வழங்கப்படுகின்றன!

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Vifaa vya vipimo vya rapid antigen vyatolewa ndani ya boxi.

Serikali ya Magharibi Australia kwa sasa inatoa vifaa vya vipimo vya RAT 15 bure kwa kila nyumba jimboni humo. Source: AAP Image / Joel Carrett

மேற்கு ஆஸ்திரேலிய குடும்பங்கள் இன்று முதல் சுமார் 15 வரையான இலவச RAT உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு வீட்டிற்கு 5 RAT உபகரணங்களை வழங்குவதாக மாநில அரசு முதலில் அறிவித்திருந்தநிலையில், இதற்கெனப் பதிவுசெய்தவர்களுக்கு மேலதிகமாக 10 சோதனை உபகரணங்கள் வழங்கப்படும்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநில குடியிருப்பாளர்கள் தமக்கான இலவச RAT சோதனை உபகரணங்களைப் பெறுவதற்கு   அல்லது 13 26843 என்ற இலக்கத்தை அழைப்பதன்மூலமோ விண்ணப்பிக்கலாம். இந்த இலக்கமூடாக மொழிபெயர்ப்பு உதவியும் வழங்கப்படுகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள Omicron பரவலை எதிர்கொள்ள வசதியாக, Royal Perth மருத்துவமனையில் 24 படுக்கைகள் கொண்ட புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson நேற்று இதனைத் திறந்து வைத்தார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா, ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 10,689 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 1,032 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 38 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,460 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர். 197 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,589 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 246 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,376 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 40 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 March 2022 1:24pm
Updated 15 March 2022 1:26pm


Share this with family and friends