மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறபோதிலும், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் 'நிலை 2' இலிருந்து 'நிலை 1' ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
8 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு (பள்ளிகளில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) வீட்டைத் தவிர, அனைத்து உள்ளரங்கிலும் முகக்கவசங்களை அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்தில், டாக்சிகள் மற்றும் rideshare வாகனங்கள், மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
பள்ளி மற்றும் பயணிகள் போக்குவரத்து ஊழியர்களுக்கான கட்டாய தடுப்பூசி நடைமுறையை, தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் கைவிட்டுள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், டாக்ஸி மற்றும் rideshare ஓட்டுநர்கள் இப்போது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிக்குத் திரும்பலாம்.
கோவிட் தொடர்பான இறப்புகள் நியூ சவுத் வேல்ஸில் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூன்று சாத்தியமான சூழ்நிலைகளை - அடிப்படை சூழ்நிலை, சிறந்த சூழ்நிலை மற்றும் மோசமான சூழ்நிலை - விளக்குகிறது.
அடிப்படை சூழ்நிலை: வைரஸ் தொடர்ந்து உருவாகி வருகிறது. ஆனால் நீடித்த மற்றும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அதன் தீவிரம் காலப்போக்கில் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
சிறந்த சூழ்நிலை: எதிர்கால திரிபுகள் பெரும்பாலும் குறைந்தளவு கடுமையானவை.
மோசமான சூழ்நிலை: மிகவும் வீரியம் மிக்க மற்றும் மிகவும் பரவக்கூடிய திரிபு உருவாகி, கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக குறைவடைதல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து சுமார் 479 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆறு மில்லியன் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
NSW, விக்டோரியா, ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 31 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 22,107 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர். 1,326 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 39 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,292 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர். 312 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 2,478 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
ACT- இல் புதிதாக 1,194 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 47 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,289 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 362 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 9,727 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர். 219 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.