விக்டோரியாவில் உச்சத்தை விஞ்சிய தொற்றாளர் எண்ணிக்கை; NRL இறுதிப்போட்டி நடக்கும்

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Victoria COVID-19

People are seen crossing Bourke Street in Melbourne. Source: AAP/DANIEL POCKETT

  • விக்டோரிய மாநிலத்தில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,488 – பதியப்பட்ட உச்சம் இது
  • NSW மாநிலத்தில் 813 புதிய தொற்றாளர்கள்
  • ACTயில் புதிதாக 52 பேருக்குத் தொற்று
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்குத் தொற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,488 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  மாநிலத்தில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட மிக அதிகமான தொற்றாளர் எண்ணிக்கை இது.  தற்போது 429 பேர் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அதில் 97 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 54 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பல மருத்துவமனைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.  அவற்றில், பிராந்திய இடங்களான Warrnambool, Shepparton, Gisborne, East Bendigo, Muckatah மற்றும் Ballarat மருத்துவமனைகளும் அடங்கும்.

முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் தனி நபர் வியாபாரங்களுக்கும் மாநில அரசு நிதி ஆதரவு வழங்குகிறது.  செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 196.6 மில்லியன் டொலர் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில கருவூலக்காப்பாளர் Tim Pallas அறிவித்தார்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 813 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 10 பேர் இறந்துள்ளார்கள்.

மாநிலத்தில் தற்போது 1,005 பேர் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அதில் 202 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 99 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

NRL இறுதிப் போட்டி பிரிஸ்பன் நகரில் நாளை நடக்கவிருக்கிறது.  இதன்போது சுகாதார உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மற்றவர் வீடுகளில் சட்டவிரோதமாக கூட வேண்டாம் என்றும் மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty மக்களைக் கேட்டுக்கொண்டார்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 52 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுடன் 29 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், ஏற்கனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்குத் தொற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  இருவரும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட தொற்றுடன் தொடர்புடையவர்கள்.
  • NRL இறுதிப் போட்டி நாளை நடக்கும் மைதானத்தை சுற்றி தடுப்பூசி போட வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் Yvette D'Ath கூறினார்.
Victoria vs NSW case numbers
Source: SBS


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 2 October 2021 1:33pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends