NSW தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Polisi wamkamata mwandamanaji MELBOURNE

Polisi wa Victoria wamkamata mwandamanaji karibu ya Royal Botanic Gardens, kwenye maandamano dhidi ya chanjo mjini Melbourne, Jumamosi, Oktoba 2, 2021. Source: AAP Image

  • விக்டோரிய மாநிலத்தில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,220
  • NRL இறுதிப் போட்டி நடந்தாலும் சட்டவிரோதமாக கூட வேண்டாம் என்று NSW மாநில மக்களுக்கு எச்சரிக்கை
  • ACTயில் புதிதாக 38 பேருக்குத் தொற்று
  • டாஸ்மேனியா மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,220 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மூன்று பேர் இறந்துள்ளார்கள்.

கட்டுப்பாடுகள் அனைத்தும் சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்கவும் என்று கூறிய Premier Daniel Andrews, “எமக்கு சுதந்திரமாக நடமாட உரிமை என்று நாம் சொல்வது சுகாதாரத் துறையினர் பணியை மேலும் கடினமாக்கும்” என்றார்.

தடுப்பூசி போடுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் 109 பேரை, காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

Royal Melbourne மருத்துவமனையில், கடந்த ஜூலை மாதம் முதல் 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களில் ஒருவர் கூட, தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றும் அந்தப் பிரிவின் தலைமை செவிலியர் Michelle Spence கூறினார்.


நியூ சவுத் வேல்ஸ்

சிட்னி பெரு நகரில் முடக்க நிலை அறிமுகமாகி நூறாவது நாளான இன்று, New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 667 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

NRL இறுதிப் போட்டியின் போது சுகாதார உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மற்றவர் வீடுகளில் சட்டவிரோதமாக கூட வேண்டாம் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் Brad Hazzard மக்களைக் கேட்டுக்கொண்டார்.

தொற்றுள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், அக்டோபர் 11ஆம் தேதி முதல், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் போதுமானது.  முன்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டி இருந்தது.  ஆனால், சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை தொடர்கிறது.

 

 


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 38 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுடன் 16 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
  • டாஸ்மேனியா மாநிலத்தில் பதின்ம வயது பையன் ஒருவருக்குத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  இவர் மெல்பன் நகரிலிருந்து Launceston நகருக்கு விமானம் மூலம் பயணித்துள்ளார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.  Penrith Panthers மற்றும் South Sydney Rabbitohs அணியினரிடையே நடக்கும் NRL இறுதிப் போட்டி, Lang Park மைதானத்தில் இன்று மாலை நடக்கிறது.
  • தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Stay home Safe Life - SBS Radio
Stay home Safe Life - SBS Radio Source: SBS Radio


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 3 October 2021 1:42pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends