விக்டோரியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டியது!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 25ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Melbourne City

Premier Daniel Andrews said Victoria is 'one of the safest places anywhere in the world' after the state surpassed 90 per cent double vaccination target. Source: Getty Images

  • Byron Bay-இல் புதிதாக கோவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுதைத் தொடர்ந்து, வடக்கு NSW-உடன் ஏற்படுத்தப்படவிருந்த Travel bubble திட்டத்தை மீளாய்வு செய்யவேண்டியுள்ளதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
  • NT-இல் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவற்றை நம்புவதற்குப் பதிலாக பூர்வீக குடிப்பின்னணி கொண்ட பெரியவர்களின் வார்த்தைகளைப் பின்பற்றுமாறும் Chief Minister Michael Gunner கோரிக்கைவிடுத்துள்ளார்.
  • விக்டோரிய மாநிலத்தில் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • NT-இன் Katherine பகுதியிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் பயணிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியா வரமுடியாத நிலையிலிருந்த Temporary Graduate (subclass 485) விசா வைத்திருப்பவர்கள் மாற்று விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1254 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 276 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 8 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. NT-இல் புதிய தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 25 November 2021 2:34pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends