விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்கள் 'வழமை நிலைக்கு' திரும்புகின்றன!

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 22ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Mhudumu ndani ya mgahawa anayevaa barakoa, akizungumza kwa simu

Masharti ya uvaaji wa barakoa yanabadilika nchini Australia. Sheria tofauti zita tumiwa katika majimbo na wilaya tofauti. Source: Getty Images / andresr E+

  • குயின்ஸ்லாந்தில் மார்ச் 4 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பெரும்பாலான அமைப்புகளில் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை. மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு மையங்கள், ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் சிறைச்சாலைகள், விமான நிலையங்கள் பொது போக்குவரத்து மற்றும் விமானங்களில் முகக்கவசங்களை தொடர்ந்தும் அணியவேண்டும்.
  • குயின்ஸ்லாந்தில் அதே தேதியில் இருந்து density மற்றும் capacity வரம்புகள் இருக்காது.
  • குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகளால் நடத்தப்படும் வழக்கமான தினசரி கோவிட்-19 செய்தியாளர் சந்திப்பு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும்.
  • விக்டோரியாவில் பிப்ரவரி 25 வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி முதல், வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் கல்விகற்பது குறித்த பொது சுகாதார பரிந்துரைகள் அகற்றப்படும் மற்றும் பல இடங்களில் முகக்கவச கட்டுப்பாடு நீக்கப்படும்.
  • விக்டோரியாவில் பொது போக்குவரத்து, டாக்சிகள், ரைட்ஷேர்கள், விமானங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு வசதிகளில் முகக்கவசம் தொடர்ந்தும் அவசியம்.
  • விக்டோரிய பள்ளிகளில் இரண்டாம் நிலை மட்டத்தில் மட்டுமே முகக்கவசங்கள் விருப்பத்தெரிவாக மாறும். 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தடுப்பூசி விகிதங்கள் குறைவாக இருப்பதால் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் early childhood மையங்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • விக்டோரியாவிலுள்ள விருந்தோம்பல் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், நீதிமன்ற அமைப்பு மற்றும் சீர்திருத்த மையங்களில் பணிபுரிபவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். 
  • அடுத்த வாரம் முதல் விக்டோரிய மருத்துவமனைகளில் அனைத்துவகையான அறுவை சிகிச்சைகளையும் மீண்டும் தொடங்க முடியும்.
  • Omicron பரவல் உச்சத்தில் இருந்ததைவிட தற்போது கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார்.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான  மேலும் 33 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 8,752 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  14 பேர் மரணமடைந்தனர். 1,293 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 71 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 6,786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 345 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 48 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,583 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 394 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 820 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  

ACT- இல் புதிதாக 583 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 41 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

 

 

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 22 February 2022 2:18pm
Updated 22 February 2022 2:24pm


Share this with family and friends