நாட்டிலுள்ள 16 மற்றும் 17 வயதுடையோருக்கு booster தடுப்பூசி வழங்க அனுமதி

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 3ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

SBS Malayalam

Source: AFP

  • நாட்டிலுள்ள 16 மற்றும் 17 வயதுடைய இளையோர் booster தடுப்பூசியைப் பெற இப்போது தகுதி பெற்றுள்ளனர். ATAGI இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • 'முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர்' என்ற பதத்திற்குள் booster தடுப்பூசியும் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
  • கோவிட் பரவலைக் கையாண்ட முறை தொடர்பில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள முதியோர் பராமரிப்புத் துறை தொடர்பான அமைச்சர் Richard Colbeck, தனது பதவியிலிருந்து விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese அழைப்பு விடுத்துள்ளார்.
  • Omicron திரிபானது கொரோனா வைரஸின் கடைசி திரிபாக இருக்காது என நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
  • இந்த குளிர்காலத்தில் ஒரு புதிய கோவிட் பரவலும், மற்றும்  2020 க்குப் பிறகு முதல் முறையாக Flu பரவலும் ஏற்படக்கூடும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.
  • மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் விடுதிகளில் தனிமைப்படுத்தும் நடைமுறையைப் பேணிவரும் நியூசிலாந்து அரசு, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், பெப்ரவரி 27ம் திகதி முதல் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும்வகையில், ஐந்து கட்டங்களாக கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ளது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 12,632 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 38 பேர் மரணமடைந்தனர். 2,578 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,157 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 34 பேர் மரணமடைந்தனர். 752 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 82 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,643 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 749 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 47 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில்  கோவிட் தொற்றாளர்கள் ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக 1583 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 226 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

Northern Territory-இல்  கோவிட் தொற்றாளர்கள் ஒருவர் மரணமடைந்தார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 3 February 2022 4:39pm
Updated 3 February 2022 4:44pm


Share this with family and friends