விக்டோரியாவில் 36 பேர், குயின்ஸ்லாந்தில் 11 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 29 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 87 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இரண்டு RAT உபகரணங்களின் செயல்திறன் தொடர்பிலான தகவலை வழங்கத் தவறியதற்காக, 2San Pty Ltd-க்கு மொத்தம் $66,600 மதிப்பிலான ஐந்து அபராதங்களை TGA விதித்துள்ளது.
2San Pty Ltd-இன் கருத்தினைப் பெறுவதற்காக SBS அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளது.
NSW மாநிலத்தில் கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் 22 சதவீதம் அதிகரிப்பு காணப்படுவதாக NSW Health தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Flu பரவல் குறைவடைந்துள்ளபோதிலும், flu தடுப்பூசி தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது.
விக்டோரியா தனது $1.5 பில்லியன் டொலர் COVID Catch-Up திட்டத்தின் கீழ் Bellbird தனியார் மருத்துவமனையில் ஒரு புதிய பொது அறுவை சிகிச்சை மையத்தை திறக்கவுள்ளது.
இந்த மையம் 2022 பிற்பகுதியில் செயல்பட ஆரம்பிக்கும் அதேநேரம் ஆண்டுதோறும் 5,700 க்கும் மேற்பட்ட விக்டோரியர்களின் அறுவை சிகிச்சைகளுக்கு உதவும்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான உலகளாவிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஒன்பது சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 10,515 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,550 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,652 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,739 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,919 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
டஸ்மேனியாவில் புதிதாக 661 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
ACT- இல் புதிதாக 464 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
NT-இல் 184 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.