ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசிக்கு TGA அனுமதி!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 19ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Authorities in the US and Canada have already approved Moderna's Spikevax vaccine in children under five. (file)

Authorities in the US and Canada have already approved Moderna's Spikevax vaccine in children under five. (file) Source: AAP/AP/zz/STRF/STAR MAX/IPx

விக்டோரியாவில் 25 பேர், குயின்ஸ்லாந்தில் 18 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 26 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 75 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

குயின்ஸ்லாந்தில் 983 பேர் கோவிட் தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்- இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அங்கு பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.

ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Moderna, Spikevax தடுப்பூசியை சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம் (TGA) தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது. இரண்டு சுற்று தடுப்பூசிகளையும் 28 நாட்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என TGA தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதற்கான இறுதி ஒப்புதலை ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) இன்னமும் வழங்கவேண்டியுள்ளது.

நான்காவது சுற்று கோவிட் தடுப்பூசிக்கும் சமீபத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கும் இடையிலான இடைவெளியை நான்கு மாதங்களில் இருந்து மூன்று மாதங்களாக குறைப்பதற்கு ATAGI பரிந்துரைத்துள்ளது.

Pandemic கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முதல்,  தொழிலாளர்கள் தங்கள் sick leave-ஐ பயன்படுத்துமாறு அரச சேவைகளுக்கான அமைச்சர் Bill Shorten கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களை குறைந்தபட்சம் 3வது தவணையின் முதல் நான்கு வாரங்களுக்கு முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. 

NSW பள்ளிகளில் தற்காலிகமாக கூடுதல் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  13,544 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  26 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,201  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,992 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,815 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  3 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,172  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1642 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  1221 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக  671 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 19 July 2022 3:12pm
Updated 19 July 2022 3:35pm


Share this with family and friends