நாட்டிலுள்ள 5-11 வயதுடைய குழந்தைகளில் Pfizer பூஸ்டர் தடுப்பூசிக்கு Therapeutic Goods Administration தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், நோய்த்தடுப்பு குறித்த ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு-Australian Technical Advisory Group on Immunisation இன்னமும் இத்தடுப்பூசியை மதிப்பாய்வு செய்து, சுகாதார அமைச்சருக்கு இதுதொடர்பில் தெரிவிக்கவில்லை.
குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் டாக்ஸி மற்றும் rideshare சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணம்செய்யும்போது இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.
விக்டோரியா மற்றும் ACT ஆகியவை மட்டுமே பொதுப் போக்குவரத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை இன்னமும் நீக்காத பகுதிகள் ஆகும்.
ACT இந்த மாத இறுதிக்குள் பொது போக்குவரத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நீக்கிவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் தொற்று குறித்த புதிய ஆய்வில் அரசு முதலீடு செய்து வருவதாக, சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்புத்துறை துணை அமைச்சர் Ged Kearney தெரிவித்தார்.
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய், inflammatory bowel disease, rheumatic diseases, HIVஉடன் வாழும் மக்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் நோயெதிர்ப்பு செயற்பாடு தொடர்பில் இந்த ஆய்வு மதிப்பீடு செய்யும்.
sotrovimab மற்றும் casirivimab-imdevimab ஆகிய இரண்டு antibody சிகிச்சைகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சிகிச்சைகள் கோவிட் -19 க்கு எதிராக பயனுள்ளதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் BF.7 என்ற புதிய கோவிட் மாறுபாட்டைக் கண்காணிக்கின்றனர்.
BA.5.2.1.7 என்றும் அழைக்கப்படும் இந்த மாறுபாடு பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுக்களுக்கும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் கிட்டத்தட்ட 10 சதவீத தொற்றுக்களுக்கும் இம்மாறுபாடு காரணமாகும்.
அமெரிக்காவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுக்களுக்கு காரணமான மற்றொரு புதிய மாறுபாடு BA.4.6 தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாகவே உள்ளது.
——————————————————————————————
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.