டாஸ்மேனியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 19ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Adelaide City

Adelaide may soon be bustling with visitors as travellers from LGAs with above 80 per cent can now travel to South Australia. Source: Getty Images

  • நவம்பர் 23 செவ்வாய்க்கிழமை அன்று, தெற்கு ஆஸ்திரேலியா தனது எல்லைகளைத் திறக்கிறது. ஆனால் 90 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட உள்ளூராட்சிப் பகுதிகளிலிருந்து வரும் பயணிகள், கடுமையாக நோயுற்றோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் அடிலெய்ட் ashes போட்டி போன்றவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • விக்டோரியா, NSW மற்றும் ACT ஆகிய இடங்களிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா வரும் பயணிகள், Phone App மூலம் 14 நாட்களுக்கு ஒருமுறை symptom-check ஒன்றைச் செய்ய வேண்டும்.
  • டிசம்பர் 15க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என NSW Premier Dominic Perrottet கூறியுள்ளார்.
  • டாஸ்மேனியாவில்  நிகழ்வுகள், pubs மற்றும் கிளப்களில் நடனமாடுதல் மற்றும் மது அருந்துதல் தொடர்பான கட்டுப்பாடுகள், முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு, டிசம்பர் 6 முதல் நீக்கப்படுகிறது. டிசம்பர் 15 அன்று டாஸ்மேனியா எல்லை  hotspot பகுதிகளிலுள்ளவர்களுக்கு திறக்கவுள்ளது. 
  • iPhones மற்றும் iPads ஐ வழங்குவதன் மூலம் பதின்வயதினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், டாஸ்மேனியா ‘5-day vaccination blitz’ ஐ அறிமுகப்படுத்துகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,273 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 216 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 17 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

NT-இல் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 19 November 2021 1:57pm
Updated 19 November 2021 1:59pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends