ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், நாட்டில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை பலர் நிறுத்தியிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக குறைந்த கல்வி, குறைந்த வருமானம் உள்ளவர்கள், ஆங்கிலம் முதல்மொழியாக இல்லாத வெளிநாட்டில் பிறந்தவர்கள், வலதுசாரிகள் என்று அடையாளப்படுத்துபவர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களின் ஊடாகவும் செய்திகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், மூன்றாவது அல்லது நான்காவது கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
25-34 வயதுடையவர்களிடையே மிகக் குறைந்தளவானோரே மூன்றாவது அல்லது நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளான ஆஸ்திரேலியர்கள் பலர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தலை நீக்குவதற்கான NSW Premier Dominic Perrottetஇன் கோரிக்கையை, தேசிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை விவாதிக்க வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 31 அன்று நடந்த தேசிய அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அறிகுறியற்ற கோவிட் தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழிலிருந்து ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.
BA.5/BA.4ஐத் தவிர மற்ற Omicronஇன் துணை வகைகளில் இருந்து வரும் தொற்றுக்களைக் கண்காணித்து வருவதாக NSW Health கூறியுள்ளது.
புதிய துணை வகைகளான BA.2.75 மற்றும் BA.4.6 ஆகியவை, மாநிலத்தில் கடந்த வாரம் PCR சோதனை மூலம் கண்டறியப்பட்ட மொத்த கோவிட் நோயாளிகளில் 12.4 சதவீதம் மற்றும் 5.2 சதவீதம் ஆகும்.
செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மொத்த புதிய வாராந்திர கோவிட்-19 தொற்றுகள் 11 சதவீதமும், இறப்புகள் 18 சதவீதமும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகளவில் 612 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் மற்றும் 6.5 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன.
——————————————————————————————
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.